fbpx

விந்தணு தானத்தால் வந்த வினை..!! ஒரே முகஜாடையில் பிறந்த குழந்தைகள்..!! அதிர்ச்சி உண்மை அம்பலமானது எப்படி..?

மாறிவரும் காலநிலை மற்றும் உணவுப் பழக்கவழக்கம் காரணமாக உலகம் எங்கும் குழந்தையின்மை பிரச்சனை அதிகரித்து வருகிறது. இருப்பினும், நவீன சிகிச்சை மூலம் தம்பதியினர் குழந்தைகளைப் பெற்றெடுத்து வருகின்றனர். இதில், விந்தணு தானம் முக்கியக் காரணம் வகிக்கிறது. விந்தணு தானம் பெறுவதற்கென தனியாக சேமிப்பு வங்கிகளும், அமைப்புகளும் உள்ளன. அந்த வகையில், ஆஸ்திரேலியாவிலும் குழந்தையின்மை பிரச்சனை அதிகமாகவே உள்ளது. பெற்றோராக நினைக்கும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் பலரும் விந்தணு தானம் மூலம் குழந்தை பெறுவதும் அங்கு வழக்கமாக உள்ளது. ஆஸ்திரேலியா சட்டப்படி விந்தணுக்களுக்குப் பணம் செலுத்துவதும் பரிசுகளை வழங்குவதும் சட்டவிரோதமானது. இதுதொடர்பான எந்த குற்றத்திற்கும் 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவர், அங்குள்ள சட்டங்களை ஏமாற்றி போலி பெயர்களில் சுமார் 60-க்கும் மேற்பட்டோருக்கு விந்தணுக்களை தானம் செய்துள்ளார். விந்தணு தானம் பெற்றவர்களில் உள்ள தன்பாலின ஈர்ப்பாளர்கள் சிலர், சமீபத்தில் அனைவரும் நிகழ்ச்சி ஒன்றில் கூடியுள்ளனர். அப்போது, அவர்களின் குழந்தைகள் எல்லோரும் ஒரே மாதிரியாக இருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கருத்தரிப்பு மையத்துக்கு நேரில் சென்று விசாரித்துள்ளனர். அப்போதுதான், ஒரே நபர் பல்வேறு பெயர்களில் ஏமாற்றி விந்தணு தானம் செய்தது தெரியவந்தது. குற்றம் உறுதியானபோதும், குற்றவாளியின் பெயர் பற்றிய விவரம் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.

Chella

Next Post

டிக்டாக் லைவ்வில் மனைவியின் கண்ணத்தில் ஓங்கி அறைந்த கணவன்..!! அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள்..!!

Tue Feb 28 , 2023
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் 4 நண்பர்களுடன் ஒரு போட்டியில் ஈடுபட்டார். டிக்டாக்கில் 4 பேரும் லைவ் செல்ல வேண்டும். அதில் யாருக்கு அதிக பார்வையாளர்கள் வருகிறார்களோ, அவர்களே வெற்றியாளர் என்பதுதான் போட்டி. அதன்படி போட்டியும் தொடங்கியது. பாதிக்கப்பட்ட பெண் லைவ்-வில் பேசிக்கொண்டிருக்கும் போதே அவரின் கணவர் குறுக்கிட்டு அந்தப் பெண்ணை கன்னத்தில் அறைந்தார். அந்தப் பெண் சில நிமிடங்கள் அழுதது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் […]

You May Like