fbpx

தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் இதுதான்…

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ரூ.37,568-க்கு விற்பனையாகிறது….

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது..

இந்நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ஒரு கிராமுக்கு ரூ.16 உயர்ந்து ரூ.4696-க்கு விற்பனையாகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ரூ.37,568-க்கு விற்பனையாகிறது…. ஆனால் வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது.. ஒரு கிராமுக்கு 40 காசு குறைந்து ரூ.61.20-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.61,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Maha

Next Post

மாணவர்கள் கவனத்திற்கு.. B.E., B.Tech., படிப்புகளில் நேரடி 2-ம் ஆண்டில் சேர கால அவகாசம் நீட்டிப்பு..

Sat Jul 23 , 2022
டிப்ளமோ முடித்தவர்கள் B.E., B.Tech., படிப்புகளில் நேரடியாக 2ம் ஆண்டில் சேருவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.. பொறியியல்‌ கல்லூரிகளில்‌ முதலாமாண்டு மாணவர்கள்‌ சேர்க்கைக்காக விண்ணப்பித்தற்கான கால அவகாசம்‌ 19.07.2022. என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும்‌, கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரிகளில்‌ முதலாமாண்டு மாணவர்கள்‌ சேர்க்கைக்காக விண்ணப்பதற்கான கால அவகாசம்‌ 07.07.2022 என்றும்‌ அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்‌ வெளிவராத நிலையில்‌ அம்முடிவுகள்‌ வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஐந்து […]

You May Like