நெல்லை மாவட்டம் தச்சநல்லூரைச் சேர்ந்தவர் ராமர். 35 வயதான இந்த வாலிபர் மீது தச்சநல்லூர், பேட்டை, மானூர் உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் திருட்டு, கொள்ளை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் தான் கொலை மிரட்டல், பாலியல் பலாத்கார வழக்கும் பதிவு செய்யப்பட்டிருந்ததில் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்து இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சத்திரம் புதுக்குளம் பகுதியில் 32 வயதான பெண் காட்டுப்பகுதியில் தனியாக சென்று கொண்டிருந்தார். அப்போது மறைந்து நின்ற ராமர் திடீரென்று அவர் முன்பு பாய்ந்து கத்தியை காட்டி மிரட்டி ஆபாசமாக போட்டோ எடுத்துள்ளார். பின்னர் அந்த போட்டோவையும் காட்டி மிரட்டி அந்த பெண் மீது கத்தியால் குத்தி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பியோடியுள்ளார்.
காயங்களுடன் தப்பி வந்த அந்த இளம்பெண் பாளையங்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சம்பவம் குறித்து அறிந்த தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, சத்திரம்புதுக்குளம் பகுதியில் ராமர் தலைமறைவாக இருப்பது தெரிய வந்ததும் அவரை கைது செய்தனர். தொடர்ச்சியாக ராமர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நெல்லை ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.