fbpx

மக்களே…! சென்னையில் ஸ்ட்ரைக்…! தமிழகம் முழுவதும் அடுத்த இரண்டு நாட்களுக்கு கிடையாது…!

ஓலா, ஊபர் நிறுவனங்கள் வழங்கும் சம்பளத் தொகை போதுமானதாக இல்லை என்றும், பைக் டாக்சிகளை தடை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என கோரி இன்று மற்றும் நாளை இரண்டு நாள் வேலைநிறுத்தத்தை 14 வாகன ஓட்டுநர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன.

ஓலா, ஊபர் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, கால் டாக்சிகளை பல ஆயிரக்கணக்கானோர் இயக்கி வருகின்றனர். இவர்களுக்கு ஓலா, ஊபர் நிறுவனங்கள் வழங்கும் சம்பளத் தொகை போதுமானதாக இல்லை என்றும், நிறுவனங்கள் எடுத்துக்கொள்ளும் கமிஷன் தொகை அதிகமாக இருப்பதாகவும் ஓட்டுநர்களும் கார் உரிமையாளர்களும் புகார்களை தெரிவிக்கின்றனர்.

மேலும், பைக் டாக்சி முறையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கால் டாக்சி ஓட்டுநர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் நாளை மற்றும் நாளை மறுநாள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இரண்டு நாட்களுக்கு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்த உள்ளதாகவும், வரும் 18ஆம் தேதி மாபெரும் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் கால்டாக்சி ஓட்டுநர்கள் அறிவித்துள்ளனர். இதனால் 80 சதவீத கால் டாக்சிகள் நகரத்தில் இயங்காது.

இதுகுறித்து தமிழ்நாடு கால் டாக்சி தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் எம்.பூபதி கூறியதாவது: கால்டாக்சி நிறுவனத்தினர் எந்தவித கட்டுப்பாடும் இன்றி சேவைகளை இயக்குகின்றனர். “மோட்டார் வாகன ஒருங்கிணைப்பு வழிகாட்டுதல்களை மத்திய அரசு 2020 இல் வெளியிட்டது, ஆனால் அது மாநிலத்தில் செயல்படுத்தப்படவில்லை.

விதிமுறைகள் இல்லாததால், வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். பயணிகளுக்கு நியாயமான கட்டணத்தை நிர்ணயிக்கவும், ஓட்டுநர்களுக்கு சிறந்த வருமானம் கிடைக்கவும் இந்த விதிமுறை உதவும்,” என்றார். போக்குவரத்து தேவைக்காக பயன்படுத்தப்படும் தனியார் வாகனங்களுக்கு எதிராக போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Vignesh

Next Post

மகிழ்ச்சி...! சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ.5,000 ஆக உயர்த்தப்படும்...! முதல்வர் அதிரடி வாக்குறுதி...

Mon Oct 16 , 2023
தெலுங்கானாவில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ.2016-இல் இருந்து படிப்படியாக உயர்த்தப்பட்டு ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று முதல்வர் சந்திரசேகர ராவ் வாக்குறுதி அளித்துள்ளார். தெலங்கானா மாநிலத்தில் வரும் நவம்பர் மாதம் 30-ம் தேதி 119 தொகுதிகளுக்கு சட்டபேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தெலுங்கானா ராஷ்ரீய சமிதி, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தெலுங்கானாவில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், 93 […]

You May Like