fbpx

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்… அகவிலைப்படி உயர்வு குறித்து வெளியான தகவல்..

மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ், அகவிலைப் படி, வீட்டு வாடகை கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17% இல் இருந்து 31% ஆக உயர்த்தப்பட்டது.. பின்னர் இந்த ஆண்டு ஏப்ரல் மேலும் 3% உயர்த்தப்பட்டது, 34% ஆக மாறியது..

இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த முறை 4 சதவீத அகவிலைப்படி (DA) உயர்வு கிடைக்கக்கூடும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.. இந்த உயர்வு ஜூலை மாத சம்பளத்திலேயே கணக்கிட்டு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (ஏஐசிபிஐ) 4 சதவீதம் வரை உயர்வு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது..

தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 34 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வரும் நிலையில், மேலும் 4% அகவிலைப்படி உயர்த்தப்பட உள்ளதாக தெரிகிறது. இந்த உயர்வுக்குப் பிறகு, டிஏ 38 சதவீதமாக இருக்கும். ரூ.18,000 அடிப்படை சம்பளத்தில், ஆண்டு டிஏ உயர்வு ரூ.8640 ஆக இருக்கும். அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை மாற்றியமைக்கப்படுகிறது. ஒரு திருத்தம் ஜனவரியில் செய்யப்படுகிறது, மற்றொன்று ஜூலையில் செய்யப்படுகிறது. மேலும் நிலுவையில் உள்ள டிஏ நிலுவைத் தொகை பிரச்சினையையும் மத்திய அரசு தீர்க்கலாம் என்றும், அதைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரே நேரத்தில் ரூ.2 லட்சம் நிலுவைத் தொகை வழங்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Maha

Next Post

ஒருவருக்கு இரண்டு பேரை வளைத்து போட்ட பெண்: தடையாக இருந்த கணவரை போட்டு தள்ளிய கொடுரம்...!

Wed Jul 27 , 2022
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே உள்ள சிங்கனேந்தல் பகுதியில் வசித்து வருபவர் பிச்சைக்கனி. இவருக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். பிச்சைக்கனி பரோட்டா மாஸ்டராக வெளிநாட்டில் உள்ள ஹோட்டலில் பணிபுரிந்து வந்துள்ளார். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த மே மாதம் 25-ஆம் தேதி சொந்த ஊருக்கு திரும்பிவந்துள்ளார். மே மாதம் 27-ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் பிச்சைக்கனி […]

You May Like