பாகிஸ்தான் கராச்சியில் பல பெண்களை பலாத்காரம் செய்து மிரட்டிய குற்றச்சாட்டில் பள்ளி முதல்வர் ஒருவரை கராச்சி போலீசார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
கராச்சியின் குல்ஷன்-இ-ஹதீத் பகுதியில் உள்ள பள்ளியின் முதல்வர் இர்பான் என்பவர் 24க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்டுகிறது.
தலைமை ஆசிரியர் இர்பானின் கைப்பேசியில் இருந்து 25 சிறிய வீடியோ கிளிப்களை கராச்சி போலீசார் மீட்டனர். இதன் மூலம் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர் 24 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை அவருடன் பாலியல் உறவு கொள்ள வற்புறுத்தியது தெரியவந்தது. தலைமை ஆசிரியர் மற்றும் பெண் ஆசிரியையின் ஆபாச வீடியோ இணையத்தில் பரவியதை அடுத்து இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது
“இதுவரை, தலைமை ஆசிரியர் மீது ஐந்து பெண்கள் புகார் அளித்துள்ளனர், மேலும் டஹ்லாமை ஆசிரியரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம், பாதிக்கப்பட்டவர்களிடமிருந்தும் தேவையான தகவல்களை நாங்கள் சேகரித்து வருகிறோம்,” என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.