Sun Affects:இந்த ஆண்டு கோடைக்காலம் துவங்கும் முன்னரே வெயில் வெளுத்து வாங்கத் துவங்கியுள்ளது. உலகம் முழுவதும் பருவநிலை வேகமாக மாறி வருகிறது. பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கிறது. இப்படிப்பட்ட வெயில் மனித உடலில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். இதில், சராசரியாக 68 வயதுடைய 3700 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். 2010 முதல் 2016 வரை 6 ஆண்டுகள் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், நீண்ட கால வெப்பத்தின் தாக்கத்தால் மனித டிஎன்ஏக்களில் உயிரியல் மாற்றம் குறித்து தரவுகள் திரட்டப்பட்டன.
இந்த ஆய்வின் அதிர்ச்சிகரமான முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. இதன்படி, அதிகப்படியான வெயில் நம்மை சோர்வடைய வைப்பது மட்டுமின்றி அதிகபட்சம் 2.48 ஆண்டுகள் முன்கூட்டியே முதுமை அடையச் செய்வதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வெப்ப அழுத்தம், எந்த டிஎன்ஏவை இயக்குவது, நிறுத்துவது என்பதில் பாதிப்படையச் செய்கிறது. இது நமது வயது மூப்பு விகிதத்தை பாதிக்கிறது. இந்த டிஎன்ஏ மாற்றம் எலிகள் உள்ளிட்ட விலங்குகள் மீது நடத்தப்பட்ட சோதனையிலும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் பல ஆராய்ச்சிகள் நடத்த வேண்டுமென ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
Readmore: RIP| 3 முறை ஒலிம்பிக் சாம்பியன்!. ரஷ்ய மல்யுத்த வீரர் சைட்டீவ் காலமானார்!