fbpx

வாட்டும் வெயில்: தலை சுற்றவைக்கும் இளநீர் விலை…!

கடுமையான வெயிலின் தாக்கத்தால் இளநீரின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் தற்போது ஒரு இளநீர் சராசரியாக ரூ.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பதே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பல மாவட்டங்களில் வெயில் சதம் அடித்து வருகிறது.வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபட இளநீர் கடைகளை மக்கள் அதிகளவில் நாடுகின்றனர்.மேலும் பழங்கள், குளிர்பானங்களை பருகிமவருகின்றனர்.

இதனால் பழங்களின் தேவை அதிகமாகி வருகிறது. மேலும் விலையும் நாளுக்கு நாள் உயர்கிறது. அந்த வகையில் இயற்கையாக கிடைக்கக்கூடிய, நம் தாகத்தை தணிக்க கூடிய இளநீர், நொங்கு போன்றவற்றின் விலை அதிகரித்து வருகிறது. சென்னையில் சராசரியாக ஒரு இளநீரின் விலை ரூ. 30 வரை உயர்ந்துள்ளது. சாதாரண நாட்களில் ரூ.60க்கு விற்கப்பட்ட இளநீர் தற்போது ரூ. 90க்கு விற்பனையாகிறது.

ரூ. 20, 30க்கு விற்பனையான இளநீர் தற்போது ரூ. 40க்கு விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தர்பூசணி, எலுமிச்சை போன்றவற்றின் விலைகளும், பழங்களின் விலையும் அதிகரித்த வண்ணம் உள்ளன.

Read More: EPS: அரசு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்…!

Rupa

Next Post

கடும் நிலச்சரிவு!… இடிபாடுகளுக்குள் சிக்கிய பேருந்து, கார்!… 2 பேர் உயிரிழப்பு!

Mon Apr 29 , 2024
Landslide: அருணாச்சலப் பிரதேசம் சிம்லாவின் ரோஹ்ரு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவின் இடிபாடுகளில் சிக்கிய காரில் பயணம் செய்த 2 பேர் பலியாகினர். அருணாச்சலப் பிரதேசம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் நிகழ்ந்த நிலச்சரிவில், பேருந்து ஒன்று பாலத்தில் இருந்து தவறி விழுந்ததில் சுமார் 10 பேர் காயமடைந்தனர். இந்தநிலையில், ஹட்கோட்டி-தியுனி சாலையில் ரோஹ்ரு பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அவ்வழியாக சென்றுக்கொண்டிருந்த கார் ஒன்று இடிபாடுகளில் சிக்கியது. இதில் காரில் பயணம் […]

You May Like