உலகம் என்பது பலதரப்பட்ட கலாச்சாரத்தை உள்ளடக்கியது. இந்தியாவில் மட்டுமே ஆயிரக்கணக்கான கலாச்சார வித்தியாசங்கள் உள்ளன. ஆனால் இப்போது நாம் பார்க்க இருப்பது உலகில் உள்ள கோணம் வினோதமான மக்கள் குழுக்களின் கலாச்சாரங்களை பற்றி தான். இவற்றில் பெரும்பாலானவை பழங்குடியின சாயத்தை சார்ந்தே அமைகிறது. ஆனால் இங்கு ஒரு இன மக்கள எந்த நாட்டின் குடியுரிமையும் இல்லாமல், காலம் காலமாக கடலிலேயே வசித்து வருகின்றனர். உலகத்தின் ஒரு பகுதியாக கடலை பாவிக்கும் நமக்கு, உலகமே கடலாக இருக்கும் பஜாவ் மக்களை கண்டால் சற்று ஆச்சரியமாக தான் இருக்கும்
உலக மக்களால் “SEA NOMADS” என அழைக்கப்படும் பஜாவ் மக்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகளான பிலிப்பைன்ஸ், இந்தோனேசிய கடற்பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்கள். இவர்களுக்கென்று தனியாக நாடு இல்லை, வீடு இல்லை, குடியுரிமை இல்லை. பிறப்பு முதல் இறப்பு வரை கடல் பகுதிகளிலேயே கழிக்கும் இவர்களுக்கு தொழில் என்று பார்த்தால், கடல் வாழ் உயிரினங்களை வேட்டையாடி, அதனை துறைமுகங்களிலும், மீன் பிடிப்பவர்களிடம் விற்று பிழைப்பு நடத்துவதில் மட்டுமே உள்ளது.
அவர்களது கலாச்சாரத்தில் பாரம்பரிய இசை, நடனம், கதை சொல்வது, பரம்பரை பரம்பரையாக கற்றுக்கொண்ட வித்தையை வைத்து வித்தியாசமான முறைகளால் கடல் வாழ் உயிரினங்களை பிடிப்பது என குறிப்பிட்ட சிலவை மட்டுமே உள்ளது. பஜாவ் மக்களின் பேச்சு மொழி, அவர்கள் வாழும் நாட்டிற்கு ஏற்றார் போல் சமா- பஜாவ், மலாயோ-போலிநேசியன் என சிறிது மாறுப்படும். பஜாவ் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று சுத்தமான குடிநீர் இல்லாததே. கடற் பகுதிகளில் வாழும் இம்மக்கள் அங்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் மினரல் வாட்டர் கேட்டு வாங்கி பருகி வருகின்றனர்.
பஜாவ் மக்கள் அரேபிய வணிகர்கள், பெனின்சுலா மற்றும் இந்திய வணிகர்களிடமிருந்து கலாச்சரத்தை பகிர்ந்துகொண்டவர்கள். மாறிவரும் கலாச்சாரங்கள், காலநிலை மாற்றம், கலங்கப்படும் கடற்பகுதிகள் மற்றும் நவீன உலகத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள பஜாவ் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக நில பரப்புகளில் வாழ துவங்கியுள்ளனர்.
Read more ; பிரபல தமிழ் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி..!! மருத்துவர்கள் தீவிர சிகிச்சை..!!