fbpx

மாஸாக வெளியான ‘புஷ்பா2’ படத்தின் இரண்டாவது பாடல்..!! வீடியோ உள்ளே..!!

அல்லு அர்ஜூன் நடித்திருக்கும் ‘புஷ்பா2’ படத்தில் இருந்து ராஷ்மிகா மந்தனாவுடனான ‘கப்புள் சாங்’ பாடல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘புஷ்பா2’ படத்தின் இரண்டாவது பாகம் ‘புஷ்பா2: தி ரூல்’ வருகிற ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், படத்தின் புரோமோஷன்களை படக்குழு தொடங்கியுள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் முன்பு ‘புஷ்பா…புஷ்பா’ பாடல் வெளியான நிலையில், இரண்டாவது சிங்கிளாக ‘சூடான’ என்ற பாடல் வெளியாகியுள்ளது.

முதல் பாகத்தில் ராஷ்மிகா, அல்லு அர்ஜூனின் ‘சாமி சாமி’ பாடல் போல, இரண்டாவது பாகத்தில் இந்த ‘சூடான’ பாடல் காதல் பாடலாக அமைந்துள்ளது. பாடலின் மேக்கிங் வீடியோவாக வெளியாகி இருக்கும் இந்த பாடலை ஸ்ரேயா கோஷல் பாடியிருக்கிறார். அல்லு அர்ஜூன், ராஷ்மிகா, இயக்குநர் சுகுமார், நடனக் கலைஞர்கள் எனப் பலரும் இருக்கும் இந்தப் பாடல் பிரம்மாண்டமான செட்டில் படமாக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் ‘சூடான’ பாடல் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படம் குறித்தான அடுத்தடுத்த அப்டேட்ஸ் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : ‘இனி விஜயுடன் ஈடுபாடு இருக்கும்’..!! தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் சொன்ன குட் நியூஸ்..!! ரசிகர்கள் மகிழ்ச்சி..!!

English Summary

Rashmika Mandhana’s ‘Couple Song’ from Allu Arjun starrer ‘Pushpaa 2’ is out.

Chella

Next Post

Youtube பயனர்களுக்கு ஆப்பு..!! இனி இந்த தவறை செய்தால் ஆடியோ கேட்காது..!! நிறுவனம் அதிரடி..!!

Wed May 29 , 2024
Users using AdBlocker can watch videos without audio.

You May Like