தெலுங்கில் உருவாகியுள்ள ஆன்மிக திரைப்படம் ‘கண்ணப்பா’ ஒரு வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மகாபாரதம் தொடரை இயக்கிய பாலிவுட் இயக்குநர் முகேஷ் குமார் சிங் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படம், கடவுள் சிவனைப் பற்றிய கதையை மையமாகக் கொண்டு, அவரது தீவிர பக்தனான கண்ணப்பரின் வாழ்க்கையை சித்தரிக்கிறது. இதில் பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு, கண்ணப்பராக நடித்துள்ளார்.
மேலும், இந்த படத்தில் சிவனாக அக்சய் குமாரும் பார்வதி தேவியாக காஜல் அகர்வாலும் நடித்துள்ளனர். மேலும் மோகன்லால், பிரபாஸ், பிரீத்தி முகுந்தன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் இந்த கண்ணப்பா படத்தில் நடித்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 25 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது, மேலும், சமீபத்தில் இதன் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் 2வது டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ஆன்மீகம் மற்றும் வீரத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை மோகன் பாபு தயாரித்துள்ளார்.