fbpx

மருத்துவமனைக்கு வந்த ’பேய் நோயாளிக்கு’ வழிகாட்டிய பாதுகாப்பாளர்… மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ வைரல்….

மருத்துவமனையில் இரவு நேரத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பாதுகாவலர் பேய் நோயாளிக்கு வழிகாட்டு வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.

அர்ஜென்டினாவில் மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவம் நடந்துள்ளது. சி.சி.டி.வியில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அர்ஜென்டினாவில் தனியார் மருத்துவமனையில் இரவு நேரத்தில் பாதுகாவலர் பணியில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த நபர் மருத்துவர் அறைக்கு வழிகேட்டுள்ளார். அவரிடம் தகவலை பெற்றுக் கொண்ட நபர் சக்கர நாற்காலியில் அழைத்துக் கொண்டு மருத்துவர் அறைக்கு செல்கின்றார்.

ஆனால், வீடியோவில் எந்த உருவமும் பதிவாகவில்லை என்பது அதிர்ச்சிகரமான விஷயம். ரிசப்ஷனில் பாதுகாப்பில் இருந்த நபர் மட்டுமே வீடியோவில் தென்படுகின்றார். சென்சாரால் வேலை செய்யும் கதவு பொருத்தப்பட்டுள்ளது. கதவு யாருமின்றி தானாக திறக்கின்றது. பாதுகாவலர் நடந்து செல்வது, அவரிடம் தனது குறிப்பேட்டில் குறிப்பெடுத்துக் கொள்வது. பின்னர் பாதுகாவலரிடம் தனியாக பேசுவது என அனைத்தும் இதில் பதிவாகி உள்ள நிலையில் உருவத்தை மட்டும் காணவில்லை. நேரில் ஒரு பெண்ணை பார்த்ததாகவும் அவரிடம் தான் பேசியதாகவும் பாதுகாவலர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து பெயர் மற்றும் விவரங்களை வைத்து பாரக்கும்போது குறிப்பேட்டில் இருந்த பெண்ணிய் பெயர் அதற்கு முந்தைய நாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ வெளியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மருத்துவமனை நிர்வாகம் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. சென்சார் கதவு ரிப்பேராக இருப்பதாகவும் இதனால் 10 மணி நேரத்தில் கதவி தானாக 28 முறை திறந்து மூடியதாகவும் பாதுகாப்பு நிறுவன பாதுகாப்பாளர் காமெடி செய்வதற்காக அவ்வாறு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் முதலில் பார்த்த அனைவரும் பயந்துவிட்டதாகவும் கமெண்ட் பாக்ஸில் இது ’ப்ராங்க்’ என இருந்துள்ளது. இதையடுத்து நன்றாக நடித்ததற்காக பாதுகாப்பாளருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Next Post

பிராங்க் வீடியோ..!! யூடியூபர்களை நேரில் அழைத்து எச்சரித்த போலீஸ்..!! கடும் வார்னிங்..!!

Wed Nov 23 , 2022
பிராங்க் வீடியோக்களால் பாதிக்கப்படும் பொதுமக்கள் புகார் அளித்தால், சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது. சென்னையைச் சேர்ந்த ரோகித் குமார் என்ற இளைஞர் பிராங்க் வீடியோக்கள் வெளியிடும், கட்டெறும்பு, குல்பி, ஆரஞ்சு மிட்டாய், ஜெய் மணிவேல், நாகை 360 ஆகிய 5 யூடியூப் சேனல்கள் மீது மத்திய குற்றப் பிரிவில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல்களின் […]
பிராங்க் வீடியோ..!! யூடியூபர்களை நேரில் அழைத்து எச்சரித்த போலீஸ்..!! கடும் வார்னிங்..!!

You May Like