தருமபுரி மாவட்டத்தில் SDAT- ஸ்டார் இறகுபந்து அகாடமிக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு நடைபெறவுள்ளது.
இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டை விளையாட்டில் முதன்மையான மாநிலமாக உருவாக்குவதுடன் தனிநபர்களுக்கு விளையாட்டுகளை முழு திறனுடன் அணுகவும், அவர்கள் உயர் மட்ட போட்டிகளில் பங்குபெற்று சிறப்படையவும் வாய்ப்புகளை வழங்குகிறது. தமிழ்நாடு அரசு விளையாட்டு மற்றும் இளைஞர் நலனின் மேம்பாட்டில் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டு, பல்வேறு திட்டங்களுக்கு தொடர்ந்து நிதி உதவிகளை வழங்கி வருகிறது.
பல்வேறு விளையாட்டுகளில் உயர்தர பயிற்சிக்கான வழிகளை உருவாக்கி, வீரர்களை தேசிய மற்றும் சர்வதேச அளவில் அவர்களின் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்திடும் நோக்கத்தோடு விளையாட்டு வீரர்களின் பின்புலம் தனித்திறன்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து வீரர் வீராங்கனைகளுக்கு சம வாய்ப்பினை வழங்கி அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் பயனளிக்கும் ஒரு சீரான விளையாட்டு மேம்பாட்டு அணுகுமுறையை வழங்குவதை இவ்வாணையம் நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.
அவ்வகையில் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் பிரபலமாக விளையாட்டுக்களில் கூடுதல் கவனம் செலுத்தி அப்பகுதியைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் பல்வேறு உயரிய நிலையிலான விளையாட்டுப் போட்டிகளில் மகத்தான வெற்றிகளைப் பதிவு செய்ய இயலும், அதனைக் கருத்தில் கொண்டு. தகுதியான பயிற்றுநர்களை மாவட்டந்தோறும் குறிப்பிட்ட விளையாட்டுக்களில் நியமனம் செய்து வீரர்கள் வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு, அனைத்து மாவட்டங்களிலும் உயரிய தரத்திலான விளையாட்டு திறன் மேம்பாடு மற்றும் அங்கீகார மையம் “STAR (SPORTS TALENT ADVANCEMENT & RECOGNITION)” உருவாக்கப்படும்” என்று துணை முதலமைச்சர் அவர்கள் 2024-2025-ஆம் ஆண்டிற்கான மான்ய கோரிக்கையின் போது அறிவித்தார்கள்.
இதன் அடிப்படையில் தருமபுரிமாவட்டஇறகுபந்து ஸ்டார் அகாடமிக்கு வீரர் வீராங்கனைகளுக்கான தேர்வு 28.04.2025 அன்று காலை 8.00 மணியளவில் மாவட்ட விளையாட்டரங்கம், தருமபுரியில் நடைபெறும். 12 வயது முதல் 21வயது வரையிலான வீரர் வீராங்கனைகள்மட்டும் இத்தேர்வு போட்டிகளில் கலந்து கொள்ளஅனுமதிக்கப்படுவர்.28.04.2025 தேர்வுக்கு வருகை தரவுள்ள வீரர் வீராங்கனைகள் தங்கள் பள்ளித்தலைமையாசிரியரிமிருந்து படிப்பு சான்றிதழ் பெற்று அதனுடன் ஆதார் அட்டை நகலினை இணைத்தல் வேண்டும்.
தேர்வு செய்யப்படும் 20 வீரர் மற்றும் 20 வீராங்கனைகளுக்கு தினமும் காலையில் முட்டை, லெமன்ஜுஸ் மாலை சுண்டல், பால் மற்றும் பழம் வகைகள் நபர் ஒன்றுக்கு ரூ.25/- மதிப்பில் நாள் ஒன்றுக்கு செலவிடப்படும். எனவே தருமபுரி மாவட்டத்திலுள்ள 12 வயது முதல் 21 வயது வரையிலான வீரர் வீராங்கனைகள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் விளையாட்டுத்திறனை மேம்படுத்திக் கொள்ளவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .