fbpx

சீனாவில் அடுத்தடுத்து நடக்கும் அதிர்ச்சி!… பெய்ஜிங் நகரில் பெய்த புழு மழை!… அச்சத்தில் மக்கள்!

சீனாவின் பெய்ஜிங் நகரில் பெய்த புழு மழை குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் தலைநகரமான பெய்ஜிங் நகரில் திடீரென புழுக்கள் மழை பெய்ததாக கூறப்படுகிறது. மேலும் அவற்றில் பூச்சிகளும் இருந்ததாக சில ஊடகங்கள் கூறுகின்றன. மழைக்குப் பிறகு நகரின் பல தெருக்களில் உள்ள வாகனங்கள், கடைகள் மற்றும் தெருக்களில் புழுக்கள் அதிகளவு தோன்றியதால் மக்களும் அச்சமடைந்ததாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும், வெளியில் செல்பவர்கள் மறக்காமல் குடைகளை எடுத்துச் செல்லுமாறு சில சீன ஊடகங்கள் அறிவுறுத்தல்களை வெளியிட்டன. சமூக ஊடகங்களில் வெளிவரும் படங்கள் மற்றும் வீடியோக்களில், பூச்சிகளை தவிர்க்க மக்கள் குடையுடன் நிற்பதை காணமுடிகிறது.

இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், இது திடீரென உருவான சூறாவளியால் இந்த புழுக்களை நகருக்குள் கொண்டு வந்திருக்கலாமென கூறுகின்றனர். இந்த வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலானதை அடுத்து ஒருசிலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதில் நானும் பெய்ஜிங் நகரில் தான் உள்ளேன். இதுபோன்று சம்பவம் எதுவும் இங்கு நடைபெறவில்லை. இது தவறான வீடியோ என்றும் பலர் கூறிவருவதும் குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

எச்சரிக்கை.. வேகமாக அதிகரிக்கும் H3N2 பாதிப்பு.. மாநிலங்கள் இதை எல்லாம் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.. மத்திய அரசு அட்வைஸ்...

Sun Mar 12 , 2023
H3N2 பாதிப்பு மற்றும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு பல புதிய நோய்கள் பரவி வருகின்றன.. அந்த வகையில், சமீபத்தில், H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. நாட்டின் பல்வேறு நகரங்களில் H3N2 வைரஸ், மக்களுக்கு பல்வேறு சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. கடந்த சில மாதங்களாக H3N2 வைரஸ் […]

You May Like