fbpx

”நீங்க யாருமே உயிரோட இருக்கக் கூடாது”..!! மனைவி, மகள் உள்பட 3 பேர் வெட்டிப் படுகொலை..!! கள்ளத்தொடர்பால் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவி, மகள் உள்ளிட்ட 3 பேரை கணவர் வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே ஜலஹள்ளி கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் 42 வயதான கங்கா ராஜு. இவர், பெங்களூரு மாவட்ட காவல்துறையின் ஹெப்பகோடி காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படை வீரராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், தனது 36 வயது மனைவி, மகள் உள்ளிட்ட 3 பேரை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்துவிட்டு காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

கங்கா ராஜு தனது மனைவி பாக்யா, மகள் நவ்யா (19) மற்றும் தனது மனைவியின் சகோதரி மகள் ஹேமாவதி (23) ஆகியோரை வெட்டிக் கொலை செய்துள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இறந்து கிடந்த 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தக் கொலைக்கு பின்னால் தகாத உறவு இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, ராஜுவின் மனைவி வேறொருவருடன் கள்ள உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கங்கா ராஜுவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, பெங்களூருவில் தற்கொலை மற்றும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Read More : இது மட்டும் இருந்தால் போதும்..!! ரூ.50,000 கடனுதவி வழங்கும் மத்திய அரசு..!! சிறு, குறு வியாபாரிகளுக்கான சூப்பர் திட்டம்..!! விண்ணப்பிப்பது எப்படி..?

English Summary

“You should not be alive”..!! 3 people including wife and daughter were hacked to death..!! Shocking incident due to illegal relationship..!!

Chella

Next Post

திருப்பதியை உலுக்கிய கோர சம்பவம்.. காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடந்தது என்ன? 

Thu Jan 9 , 2025
Tirupati stampede: Pilgrims rushed as police opened gate, says eyewitness

You May Like