சென்னை அயனாவரம் வசந்தா கார்டன் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சுகுமார் (51). இவருடைய மனைவி லதா (44), மகன் விக்னேஷ்(24) உள்ளிட்டவருடன் வசித்து வந்தார். சுகுமார் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி இருந்தார் குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், நாள்தோறும் குடித்துவிட்டு வந்து மனைவி மற்றும் மகனிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.
இத்தகைய நிலையில், கடந்த 9ம் தேதி அதிகாலை வீட்டின் படுக்கை அறையில் சுகுமார் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் அங்கே அவரை பரிசோதித்து மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறிவிட்டனர்.
ஆனால் பிரேத பரிசோதனையில் சுகுமாறு உடலில் காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆகவே இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரித்து வந்த சுகுமாரின் மனைவி மற்றும் மகனை அழைத்து தனித்தனியே விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
காவல்துறையினர் தீவிரமாக விசாரித்ததில் ஓட்டேரி நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்த உறவினரான சதீஷ் (23) எந்த வருடம் இணைந்து தந்தையை கொலை செய்ததை விக்னேஷ் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து சதீஷ், விக்னேஷ் உள்ளிட்ட இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
காவல்துறையினரிடம் விக்னேஷ் வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பதாவது, மதுப்பழக்கத்திற்கு அடிமையான தன்னுடைய தந்தை நாள் தரும் குடித்துவிட்டு இருந்து வீட்டில் ரகளை செய்வார் என்று தெரிவித்திருக்கிறார்.
சம்பவம் நடைபெற்ற அன்றைய தினம் மது குடித்துவிட்டு வந்து தாயிடம் தகராறு செய்திருக்கிறார். இது பற்றி தாய் என்னிடம் தொலைபேசியின் மூலமாக தெரிவித்தார். பாவத்தில் வீட்டிற்கு வந்தவுடன் தந்தையை சந்தித்தேன் என்று தெரிவித்திருக்கிறார் விக்னேஷ். பின்னர் என்னிடமும் தகராறு செய்ததால் அவருடைய தலையை பிடித்து இரும்பு கிரில் கதவில் பலமாக இடித்தேன் என்று கூறியுள்ளார்.
அதன் பிறகு உறவினர் சதீஷ் உதவியுடன் துணியால் கழுத்தை இறுக்கி அவரை கொலை செய்தேன் அதன் பிறகு போதையில் இறந்து விட்டதாக மற்றவர்கள் நம்ப வேண்டும் என்று நினைத்தோம், ஆனால் காவல்துறையினர் உண்மையை கண்டறிந்து விட்டார்கள் என்று அவர் தன்னுடைய வாக்குமூலத்தில் தெரிவித்திருக்கிறார்.