fbpx

வானில் கேட்ட சத்தம்..! பதறி ஓடிய மக்கள்… நேருக்கு நேர் மோதிய ஹெலிகாப்டர்கள்..!

ஆஸ்திரேலியாவில் நடுவானில் இரண்டு ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள தங்க கடற்கரை அருகே சீ வேல்டு தீம் பார்க் என்ற கேளிக்கை பூங்கா உள்ளது. கடற்கரை, கேளிக்கை பூங்கா உள்ளதால் இந்த இடம் சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்து வருவார்கள். மேலும் இங்கு சுற்றலா பயணிகளின் வசதிக்கு ஏற்ப ஹெலிகாப்டர்களும் இயக்கப்படுகின்றன.

அதேபோல் இன்றைய தினமும் அந்த பூங்காவில் ஏரளமான மக்கள் குவிந்தனர், அந்நாட்டு நேரப்படி 2 மணி அளவில், அருகில் இருந்த ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து ஒரு ஹெலிகாப்டர் புறப்படும்போது, எதிர் பக்கத்தில் இருந்து ஒரு ஹெலிகாப்டர் தரை இறங்க வந்தபோது, எதிர்பாராத விதமாக இரண்டு ஹெலிகாப்டர்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதனால் அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். விபத்தில் நொறுங்கிய ஒரு ஹெலிகாப்டர்களும் கடற்கரையில் இருந்து சில அடி தூரத்தில் உள்ள மணல் பரப்பில் விழுந்தது.

இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் விபத்தில் படுகாயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஹெலிகாப்டர்கள் நடுவானில் எப்படி மோதிக்கொண்டன என்பது தொடர்பாக ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளது.

Kathir

Next Post

இளம்பெண்ணை காரில் இழுத்துச் சென்ற குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை..? அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி..!!

Mon Jan 2 , 2023
இளம்பெண்ணை 12 கி.மீ. காரில் இழுத்து சென்ற 5 குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். டெல்லி மாநிலம் காஞ்சவாலா பகுதியில் பலினோ காருக்கு அடியில் சிக்கி அஞ்சலி என்கிற 20 வயது பெண் ஒருவர், சுமார் 12 கி.மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காரில் பயணம் செய்த 5 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பலியான பெண்ணின் […]
மூளையில் சில பகுதிகளை காணவில்லை..!! கூர்மையாக மாறிய எலும்புகள்.!! பாலியல் பலாத்காரமா..? உடற்கூராய்வில் அதிர்ச்சி தகவல்

You May Like