fbpx

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல்… தமிழகத்தில் 3 பேருக்கு ஐசியூவில் சிகிச்சை..

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000,2000 என உயர்ந்து வந்த நிலையில் நேற்று 4000-ஐ தாண்டியது… இந்த நிலையில் இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 5,000-ஐ கடந்துள்ளது.. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,335 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.. இது கடந்த 5 மாதங்களில் இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாகும்.. கொரோனா காரணமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 23,091ல் இருந்து 25,567 அதிகரித்துள்ளது..

ஒமிக்ரான் மாறுபாட்டின், XBB.1.16 வகை கொரோனா காரணமாக தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா போன்ற மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.. இதை தொடர்ந்து கொரோனா பரிசோதனையை அதிகரிக்கவும், கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு மாநிலங்களை வலியுறுத்தி வருகிறது…

தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், அரசு மருத்துவமனைக்கு வருவோர் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.. மேலும் தமிழகத்தில் தினசரி 11,000 கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை இலக்கு நிர்ணயம் செய்துள்ளது..

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.. அதில் தமிழகத்தில் 69 பேர் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும், அதில் 3 பேர் ஐசியுவில் உள்ளனர் என்றும் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.. திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என 3 பேர் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. நாகையில் 6 பேர், சென்னையில் 4 பேர், சேலத்தில் 4 பேர், தூத்துக்குடியில் 2 பேர் ஆக்ஸிஜன் படுக்கைகளில் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Maha

Next Post

கும்பகோணத்தில் ரசிகர்களால் திக்குமுக்காடிப் போன நயன்தாரா…..! கோபத்தில் செய்த செயல்…!

Thu Apr 6 , 2023
நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் நேற்று கும்பகோணத்தை அடுத்துள்ள மேலவழுத்தூரில் உள்ள கிராமத்தில் இருக்கின்ற ஆற்றங்கரை காமாட்சியம்மன் ஆலயத்திற்கு போயிருந்தார். அங்கே நயன்தாரா சென்றவுடன் ரசிகர்கள் பலரும் அங்கே ஒன்று திரண்டனர். இதன் காரணமாக, அவரால் நிம்மதியாக சாமி தரிசனத்தை கூட செய்ய முடியவில்லை. வழிபாட்டை முடித்துவிட்டு உடனடியாக ஐராதீஸ்வர் ஆலயத்திற்கு சென்றனர். அங்கும் நயன்தாராவை காண வேண்டும் என்று அவருடைய ரசிகர்களுடன் தாய்மார்கள் பலரும் காத்திருந்ததாக […]

You May Like