பள்ளி மாணவர்களுடைய பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் அதிகரிக்கும் விதத்தில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக மாவட்ட வாரியாக 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கவிதை கட்டுரை பேச்சுப்போட்டி உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு எல் ஆர் ஜி அரசு மகளிர் கலை கல்லூரியின் காலை 10 மணி அளவில் இந்த போட்டி நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் பங்கேற்று கொள்ள விருப்பம் உள்ள மாணவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பள்ளி தலைமை ஆசிரியரின் பரிந்துரையின் அடிப்படையில், போட்டி தொடங்குவதற்கு முன்னதாக தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனரிடம் வழங்க வேண்டும் ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் ஒவ்வொரு போட்டிக்கு ஒருவர் வீதம் மொத்தம் 3 மாணவர்கள் மட்டுமே பங்கேற்றுக் கொள்ள இயலும்.
போட்டிக்கான தலைப்புகள் போட்டி தொடங்குவதற்கு முன்பாக அறிவிக்கப்படும். இந்த போட்டியில் முதல் பரிசு 10,000 2வது பரிசு 7000 2வது பரிசு 5000 என்று அறிவிக்கப்பட்டுள்ளது இவை அனைத்தும் காசோலையாக மாணவர்களுக்கு வழங்கப்படும்.