fbpx

புரட்டி போட்ட புயல்..!! 1,000 விமானங்கள் ரத்து..!! மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மூடல்..!! 10 லட்சம் பேர் பாதிப்பு..!!

கிழக்கு அமெரிக்காவை தாக்கிய கடுமையான புயல் காரணமாக 1,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

நேற்று முதல் 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கையை அமெரிக்க வானிலை ஆய்வு மையம் விடுத்திருக்கிறது. நேற்று தொடங்கிய கனமழை காரணமாக தாழ்வான இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மாலை 5 மணிக்கு தொடங்கிய மழை விடிய விடிய பெய்துள்ளது. 10 மாகாணங்களில் இந்த கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புயல் காரணமாவே இப்படி பேய் மழை பெய்து வருகிறது. மழையுடன் ஐஸ் கட்டியும் வானத்தில் இருந்து விழுந்ததால் வெளியில் நிற்க வைத்திருந்த கார்கள் பலத்த சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

டென்னசி முதல் நியூயார்க் வரை 10 மாகாணங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் சுமார் 3 கோடி மக்கள் வசிக்கின்றனர். புயல் தீவிரமடைந்தால் இவர்கள் அனைவரும் கடுமையான பாதிப்பை எதிர்கொள்வார்கள். தற்போது வரை வாஷிங்டன் ரீகன் தேசிய விமான நிலையத்தில் மட்டும் 92 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக 1,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 6,800 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டுள்ளன.

புயல் காரணமாக அதிபர் பைடனின் பயண திட்டமும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மத்திய அட்லாண்டடிக் பகுதியில் மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசி வருவதால், இங்கு மீன் பிடிக்கவோ, சுற்றுலா அல்லது சரக்கு கப்பல்கள் எதுவும் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நூலகங்கள், அருங்காட்சியகங்கள், பூங்காக்கள் என அனைத்து மக்கள் கூடும் இடங்களையும் அரசு மூடியுள்ளது.

அதேபோல அலபாமா, ஜார்ஜியா, தென் கரோலினா, வட கரோலினா, மேரிலாந்து, டெலாவேர், நியூ ஜெர்சி, பென்சில்வேனியா, டென்னசி, மேற்கு வர்ஜீனியா மற்றும் வர்ஜீனியா உள்ளிட்ட மாகாணங்களில் கடுமையான மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால், சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர். புயல் ஓய்ந்த பின்னர்தான் பாதிப்பு குறித்து முழுமையாக தெரியவரும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Chella

Next Post

டெஸ்லா நிறுவனத்தில் முக்கிய பதவியில் இந்திய வம்சாவளி..!

Tue Aug 8 , 2023
டெஸ்லா நிறுவனத்தை நடத்தி வரும் எலான் மஸ்க் உலகின் டாப் 10 பணக்காரர்களில் ஒருவர். கடந்த ஆண்டு டுவிட்டரை வாங்கிய எலான் மஸ்க் அதில் பல அதிரடி மாற்றங்களை செய்தார். சமீபத்தில் டுவிட்டரின் பெயரையும் சின்னத்தையும் மாற்றி வைத்து எக்ஸ் என்ற பெயரில் புதிப்பித்துள்ளார் எலான் மஸ்க். டெஸ்லா நிறுவனத்திற்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த வைபவ் தனேஜா தலைமை நிதி அதிகாரியாக (CFO) நியமனம் செய்துள்ளார் எலான் மஸ்க். இவர் […]

You May Like