fbpx

விசாரணைக்கு அழைத்து சென்று, காரில் வைத்து பலாத்காரம் செய்த சப் இன்ஸ்பெக்டர்..! வெளியான வாட்ஸ்அப் ஆதாரங்கள்..!

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் இருந்து ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 4 ஆண்டுகளாக போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒரு பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இது தொடர்பாக வாட்ஸ்அப் பதிவுகளையும் அந்தப் பெண் வெளியிட்டுள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஒரு வழக்கு தொடர்பாக போலீஸ் அதிகாரி அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்ததாகவும், விசாரணை என்ற பெயரில் அவரை அழைத்துச் சென்று காருக்குள்ளையே அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் நடந்த சம்பவத்தைப் பற்றி யாரிடமாவது கூறினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டியுள்ளார். மேலும் அந்தப் பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களையும் எடுத்துள்ளார்.

நான்கு ஆண்டுகளாக அந்த பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் அந்த சப் இன்ஸ்பெக்டர். பின்னர் அந்த பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை உறவினர்களிடம் கூறினார். அதன் பிறகு உறவினர்கள் அவரை எஸ்எஸ்பி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர், பிறகு புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெண்ணை 4ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்தவர் முசாபர்நகரில் உள்ள போபா போலீஸ் ஸ்டேஷன் எஸ்ஐ அஜய் என அடையாளம் காணப்பட்டுள்ளது. தனது ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வைரலாக்குவதாக எஸ்ஐ அஜய் தொடர்ந்து மிரட்டுவதாக அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார். அந்த பெண் வெளியிட்டுள்ள வாட்ஸ்அப் பதிவில், எஸ்ஐ அஜய் அந்த பெண்ணை சந்திக்குமாறு வற்புறுத்தியுள்ளார், இல்லையெனில் அவர் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வைரலாக்குவதாக மிரட்டுவதும் அதில் உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். இதுகுறித்து எஸ்பி தேஹத் சஞ்சய் குமார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Kathir

Next Post

News Alert: பொங்கல் பரிசு 1,000 ரூபாய் யாருக்கெல்லாம் கிடைக்கும்.? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்.!

Tue Jan 9 , 2024
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும். இந்தப் பண்டிகை ஜனவரி மாதம் 14ஆம் தேதி முதல் தமிழகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்தப் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்கு தமிழக மக்களுக்கு ஒவ்வொரு வருடமும் அரசு சார்பாக உங்கள் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடத்திற்கான பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பொங்கல் பரிசு 1,000 ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். மேலும் அரசு ஊழியர்கள் […]

You May Like