fbpx

டைட்டானிக் கப்பலை காண சென்ற நீர்மூழ்கி கப்பல் மாயம்……! டைட்டானிக் கப்பலை சுற்றி இருக்கக்கூடிய அமானுஷ்யங்கள் எங்கே சென்றது நீர்மூழ்கி கப்பல்……?

கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை காண்பதற்காக சென்ற சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்ற நீர்மூழ்கி கப்பல் அந்த தொகுதியில் இருந்து மாயமானது ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சியில் ஆழத்தி உள்ளது.

சற்றேற குறைய 2224 பேருடன் சென்ற டைட்டானிக் கப்பல் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் இருந்த ஒரு பனிப்பாறையில் மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தின் காரணமாக, கடலில் மூழ்கிய அந்த கப்பலில் பயணித்த சுமார் 1500 பேர் மரணம் அடைந்தனர்.

இதில் 1985 ஆம் வருடம் தான் டைட்டானிக் கப்பலின் சில சிதைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இந்த கப்பலை பார்ப்பதற்காக அதிநவீன நீர்மூழ்கி கப்பலில் சுற்றுலா பயணிகள் 5 பேர் பயணம் செய்தனர்.

மேலும் நபர் ஒன்றுக்கு இந்த 5️ பேரும் தலா 2 கோடி ரூபாய் பயண கட்டணமாக செலுத்தி இந்த கப்பலில் பயணம் செய்ததாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த பயணம் தொடங்கி 1 மணி நேரம் 45 நிமிடங்களுக்குப் பின் அந்த நீர்மூழ்கி கப்பலுக்கும், கட்டுப்பாட்டு அறைக்கும் உள்ள தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

அதோடு 90 மணி நேரம் அந்த நீர்மூழ்கி கப்பலில் சுவாசிப்பதற்கான ஆக்சிஜன் இருக்கும் என்று சொல்லப்படுகிறது இந்த கப்பலில் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஹாமெஷ் ஹார்டின், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பிரிட்டிஷ் கோடீஸ்வரர் ஷாஷா தாவுத் மற்றும் அவருடைய மகன் சுலைமான் தாவுத், டைட்டானிக் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த ஓஷோன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்டார்ட் பர்ரஸ் ஆகியோர் பயணித்ததாக சொல்லப்படுகிறது.

மேலும் இந்த நீர்மூழ்கி கப்பல் டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகங்களில் எங்காவது சிக்கிக் கொண்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

Next Post

SSC முக்கிய அறிவிப்பு...! வரும் 27,28,30 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறும்...! முழு விவரம் உள்ளே...!

Sat Jun 24 , 2023
மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் 11-வது கட்ட தெரிவுப் பணியிடங்களுக்கான தேர்வை வரும் 27,28மற்றும் 30.06.2023 அன்று கணினி அடிப்படையில் நடத்தவுள்ளது. தென் மண்டலத்தில் 83,162 பேர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். 19 மையங்களில் 29 இடங்களில் இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய நகரங்களில் இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. 27,28 மற்றும் 30 ஆகிய நாட்களில் 4 […]

You May Like