fbpx

ATM கார்டு வைத்திருந்தால் ரூ.5 லட்சம் வரை காப்பீடு..!! எப்படி தெரியுமா..?

இன்றைய சூழலில் ஏடிஎம் கார்டுகளின் பயன்பாடு என்பது நமது வாழ்க்கையை மிகவும் எளிதாக்கியுள்ளது. ஏடிஎம் கார்டு நம் கைகளில் இருந்தால் பணத்தைச் செலவு செய்ய வங்கிகளில் கால் கடுக்கக் காத்திருந்து பணத்தைப் பெற வேண்டிய அவசியமில்லை.

ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தி ஆன்லைனில் மிக எளிதாகப் பொருட்கள் வாங்கலாம். அதோடு மட்டுமல்ல, பல்வேறு ஆன்லைன் வணிக நிறுவனங்கள் தனது வாடிக்கையாளர்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தினால், பொருட்களின் விலையில் தள்ளுபடியை வழங்குகின்றன.

இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளிலும் வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் சேவை வழங்கப்படுகிறது. ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணத்தை எடுக்க முடியும் என்பது மட்டும் தான் பல வாடிக்கையாளர்களுக்கு தெரியும். ஆனால், ஏடிஎம் கார்டு மூலம் காப்பீடு வசதியும் பெற்றுக் கொள்ளலாம் என்பது எத்தனை பேருக்கும் தெரியும்..? ஏடிஎம் கார்டு வழங்கப்பட்டவுடன் அந்த வாடிக்கையாளர்களுக்கு விபத்து காப்பீடும் கிடைக்க தொடங்கும். வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் ஏடிஎம் கார்டுகளின் வகைகளுக்கு ஏற்ப காப்பீடு தொகை வழங்கப்படுகிறது.

அதன்படி, சாதாரண மாஸ்டர் கார்டில் ரூ.50,000 காப்பீடும், கிளாசிக் ஏடிஎம் கார்டில் ரூ. 1,00,000 காப்பீடும், விசா கார்டில் ரூ.1,50,000 முதல் ரூ.2,00,000 வரையும், பிளாட்டினம் கார்டில் ரூ.5,00,000 லட்சம் வரையும் காப்பீடு வழங்கப்படுகிறது. மேலும், ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்கள் விபத்தில் உயிரிழக்க நேரிட்டால் ரூ.1,00,000 முதல் ரூ.5,00,000 வரை காப்பீடு கிடைக்கும்.

ஒருவேளை விபத்தில் கை அல்லது கால்கள் போன்ற உடல் ஊனம் ஏற்பட்டால் ரூ.50,000 காப்பீடு கிடைக்கும். இந்த காப்பீடு தொகையை பெறுவதற்கு வங்கியில் முறையாக விண்ணப்பித்திருக்க வேண்டும். அட்டைதாரரின் நாமினி வங்கியில் விண்ணப்பத்தை கொடுக்க வேண்டும். மேலும், இதைத் தொடர்ந்து வங்கியில் இருந்து உரிய காப்பீடு தொகை கிடைக்கும்.

Read more ; ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின்..!!

English Summary

The sum assured is given according to the types of ATM cards held by the customers.

Next Post

அரசு துறைகளின் SBI மற்றும் PNB வங்கி கணக்குகளை மூட கர்நாடகா அரசு உத்தரவு..!!

Thu Aug 15 , 2024
Why Is Karnataka Govt Angry With SBI, PNB and Saying ‘Withdraw All Deposits’

You May Like