மின் கட்டணம் செலுத்த தமிழ்நாடு மின்சார வாரியம் புதிய விதியை இன்று முதல் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ரூ 4 ஆயிரத்திற்கு மேல் உள்ள மின் கட்டணத்தை இனி ரொக்கமாக கவுன்ட்டர்களில் செலுத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மின் நுகர்வோர்கள் எண்ணிக்கை 3 கோடியே 32 லட்சமாக உள்ளது. வீடு மற்றும் அலுவலகங்களில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின்சாரம் கணக்கெடுக்கப்படுகிறது. எத்தனை யூனிட் மின்சாரம் ஓடியுள்ளதோ அற்கேற்றார் போல் கட்டணம் வரும். அதனை அடுத்த 15 தினங்களுக்குள் கட்ட வேண்டும் இல்லையென்றால் மின்சாரம் துண்டிக்கபடுவது மட்டுமில்லாமல் அபராதமும் விதிக்கப்படும்.
கடந்த ஆண்டு மட்டும் 60ஆயிரத்து 505 கோடி ரூபாயை மின்சார வாரியம் வசூலித்துள்ளது. பணம் இல்லாத பண பரிவர்த்தனை என்ற அடிப்படையில் மத்திய அரசின் உத்தரவுப்படி ரூ.20 ஆயிரத்திற்கு மேலான பரிவர்த்தனையை ரொக்கமாக பெற கூடாது என தெரிவித்திருந்தது. இதனையேற்ற தமிழக மின்சார வாரியம் முதலில் ரூ,20 ஆயிரத்திற்கு மேல் ரொக்கப்பணத்தை ஆன்லைனில் கட்ட தெரிவித்திருந்தது. இதனையடுத்து 10ஆயிரமாக குறைக்கப்பட்டது. அதன் பின்னர் கடந்த மாதம் 5ஆயிரமாக குறைக்கப்பட்டது.
இந்த நிலையில், 4 ஆயிரத்திற்கும் மேல் மின் கட்டணம் செலுத்துபவர்கள் ஆன்லைனின் மட்டுமே செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளன. இன்று முதல் (அக்டோபர் 4) 4ஆயிரம் ரூபாய்க்கு மேல் உள்ள மின் கட்டண தொகையை காசோலை, டி.டி. மூலம் மட்டுமே செலுத்த முடியும். அதே நேரத்தில் ஆன்லைனில் செலுத்த எந்தவித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. ஆன்லைன் கட்டணத்திற்கு வங்கிகள் கூடுதல் பணம் செய்யமாட்டார்கள் எனவும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
Read more ; அட்டகாசமான அறிவிப்பு..!! தீபாவளி பண்டிகைக்கும் சிறப்பு தொகுப்பு..!! என்னென்ன பொருட்கள்..?