fbpx

நோட்…! TRB பணியில் வந்தது அதிரடி மாற்றம்…! இனி இப்படி தான் இருக்கும்…! வெளியான அரசாணை…!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் உள்ளது போல், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் பணிகள் நிரப்பப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியதாவது; தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமும் மறு சீரமைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், தொழில்நுட்ப பிரிவு, கணக்கு பிரிவு, நிர்வாகப் பிரிவு, அறிவிப்பு பிரிவு, சட்டப்பிரிவு, தகவல் அறியும் உரிமைப் பிரிவு, குறைதீர்க்கும் பிரிவு மற்றும் தகவல் மையப் பிரிவு, ரகசிய பிரிவு, தேர்வு நடத்துதல் பிரிவு, சான்றிதழ் சரிபார்ப்பு பிரிவு, நூலகப் பிரிவு ஆகிய 11 பிரிவுகள் திறமையானதாகவும், பயனுள்ளதாகவும் ஏற்படுத்தப்பட்டு மறு சீரமைக்கப்படுகிறது. இது ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பதவி உருவாக்கப்பட்டு ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட உள்ளார். இது தவிர, மாவட்ட வருவாய் அதிகாரி, துணை ஆட்சியர் , இணை இயக்குநர், துணை இயக்குநர், உதவி கணக்கு அதிகாரி, மேற்பார்வையாளர் உள்பட 71 பதவியிடங்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கொள்கை விஷயங்களை தீர்மானிக்க, ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைவராகவும், பள்ளிக்கல்வி இயக்குநர்கள் உறுப்பினராகவும் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதில் 4 முன்னாள் அதிகாரிகளும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் நடுநிலை, வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுவதை உறுதி செய்வர். மேலும் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் ரகசியம் மந்தணத்தன்மையைப் பாதுகாக்கும் வகையில், சிசிடிவி பொருத்தவும், கண்காணிப்பிற்குத் தேவையான உபகரணங்களை வாங்கவும் அனுமதிக்கப்படுகிறது. பணிக்குத் தகுதியானவர்களை தேர்வு செய்வதை வேகப்படுத்தவும், சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானவர்கள் பட்டியலை அனைத்துத் தேர்விற்கும் 1:1.25 என்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இதன் படி 4 பணியிடத்திற்கு 5 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். அனைத்து அரசு கல்வி நிறுவனங்களின் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமே நிரப்பப்படும். இவர்களுக்கான தேர்வுகள் அனைத்தும் கம்ப்யூட்டர் மூலமே நடத்தப்படும். இதற்கு முன்பு பல்கலைக்கழகங்கள் பணியிடங்கள், அந்தந்த பல்கலைக்கழகங்கள் மூலம் நிரப்பப்பட்டு வந்த நிலையில், இப்போது புதிதாக ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள இருக்கும் ஆசிரியர்களை தேர்வு செய்ய தரமான வினாத்தாள்கள் வடிவமைக்கப்பட உள்ளதாகவும், அதற்கான பாடத்திட்டங்களை ஐ.ஐ.டி., புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களின் நிபுணர்களால் 3 முதல் 6 மாதத்திற்குள் வடிவமைக்கப்பட இருக்கிறது. இவர்களுக்கான பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும்.

கிராம உதவியாளர் பணிகளுக்கான நேர்காணல்..!! கட்டாயம் இதை தெரிஞ்சிக்கோங்க..!!

தேர்வர்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு குறைதீர்ப்பு மையம், இணையதளம் மூலம் குறைகளைத் தெரிவிக்கும் வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தேர்வர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கப்படுவதில்லை. ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தனியாக கட்டடம் கட்டுவதற்கு தேவையான இடத்தையும் தேர்வு செய்தும், அதற்கான திட்டமதிப்பீட்டையும் தயார் செய்து அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

கவனம்...! நீலகிரி மற்றும் கோவையில் இரவு நேரத்தில் பனிமூட்டம்...! வானிலை மையம் தகவல்...!

Sat Jan 14 , 2023
நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும், உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு […]

You May Like