நகர்ப்புற உள்ளாட்சிகளில் அனுமதி மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு நிபந்தனை உடன் சொத்துவரி விதிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; அனைத்து பேரூராட்சிகளில் உள்ள அனுமதி அற்ற கட்டிடங்களுக்கு சொத்து வரி விதிப்பது தொடர்பாக பின்வரும் அறிவுரைகள் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாவட்ட நகராட்சியின் சட்டம் 1920-ன் பிரிவு 82-ன் படி பேரூராட்சியின் எல்லைக்கு உட்பட்ட அனைத்து கட்டிடங்களுக்கும் மனைகளுக்கும் சொத்துவரி விதிப்பு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் கட்டிட அனுமதி இன்றி அல்லது விதிகளுக்கு முரணாக கட்டப்பட்ட கட்டிடங்களும் கீழ்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு சொத்து வரி விதிக்கலாம் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளது.