அங்கீகாரம் இல்லாத மனைகளை வரன்முறை படுத்துவதற்கான கட்டணத்தை திருத்தி அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மனை வரன்முறை திட்டம் 2023 கட்டணம், அங்கீகாரம் இல்லாத மனை வரன்முறை திட்டம் தமிழக அரசால் 2017 ஆம் ஆண்டு தொடக்கி வைக்கப்பட்டது. இதனால் வரன்முறை இல்லாத மனைகளும் வரன் முறைப்படுத்த முடியும் என்ற நோக்கத்தோடு அரசாணையை அரசு வெளியிட்டது. ஒரு மனைக்கு வரன்முறை இருந்தால் மட்டுமே அந்த மனையில் வாழும் மக்களுக்கு அரசு சேவைகளும் மற்றும் வங்கி கடன் சம்மந்தப்பட்டவை முழுமையாக கிடைக்கும்.
ஆனால் ஒரு சிலருக்கு இது தெரியாமல் மனையை வாங்கி பிறகு அப்ரூவல் வாங்குவதற்கு திருந்தி கொண்டிருக்கின்றனர். உங்கள் மாவட்டத்தில் உள்ள மண்டல அலுவலகத்தில் ரூபாய் 500 கட்டணமாக செலுத்தினாலே கிடைக்கும். இதற்கு உங்களிடம் சரியான ஆவணங்கள் இருந்தாலே போதுமானது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnlayoutreg.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம். இந்த நிலையில் அங்கீகாரம் இல்லாத மனைகளை வரன்முறை படுத்துவதற்கான கட்டணத்தை திருத்தி அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.