fbpx

இன்று & நாளை.. 6 மாவட்ட பெண்களுக்கு சூப்பர் அறிவிப்பு… மாதம் ரூ.12,000 உதவித்தொகை..!

தமிழக அரசு சார்பில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் பெண்களுக்காக இன்று மற்றும் நாளை ஆறு மாவட்டங்களில் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, டாடா எலக்ட்ரானிக்ஸ் இணைந்து இன்று மட்டும் நாளை 6 மாவட்டங்களில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையங்களில் முகாம்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

தேசிய பயிற்சி ஊக்குவிப்புத் திட்டத்தின் (NAPS) கீழ் இந்த முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்வித் தகுதியானது பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி மற்றும் 18-21 வயதுடைய புதிய ஐடிஐ விண்ணப்பதாரர்களும் முகாமில் கலந்து கொள்ளலாம். மொத்தம் 1,500 பேர் இந்த வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட உள்ளனர். பயிற்சி காலம் 12 மாதங்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு உணவு, போக்குவரத்து, தங்குமிடம் தவிர, மாதாந்திர உதவித்தொகையாக ரூ.12,000 வழங்கப்படும்.

English Summary

The Tamil Nadu government is organizing a private placement camp for women in six districts today and tomorrow

Vignesh

Next Post

மாசு ஏற்படுத்தும் பழைய வாகனங்களுக்கு ஆப்பு ரெடி..! மத்திய அரசு லேட்டஸ்ட் அப்டேட்...!

Thu Aug 29 , 2024
To create an ecosystem for phasing out unqualified polluting vehicles

You May Like