fbpx

தமிழக வீட்டு வசதி வாரியம் இந்த திட்டத்தை கைவிட வேண்டும்…! தேமுதிக தலைவர் விஜயகாந்த் விடுத்த முக்கிய கோரிக்கை….!

தமிழக வீட்டு வசதி வாரியம் முதலில் வரும் நபர்களுக்கு தான் முன்னுரிமை வழங்கப்படும் என்ற திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று, தேமுதிகவின் பொதுச் செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தி இருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் வீட்டு வசதி வாரியம் சார்பாக குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். இது அரசாங்கத்தின் நிறுவன திட்டம் என்பதன் காரணமாக, அதீத நம்பிக்கையோடு, பொதுமக்கள் வீடுகளை வாங்க போட்டி போடுகிறார்கள். இதன் காரணமாக, குடியிருப்பு திட்டங்களை அறிவித்து விண்ணப்பங்கள் பெற்று, குலுக்கல் மூலமாக சரியான ஒதுக்கீட்டாளரை தேர்வு செய்வது தான் வழக்கமான நடைமுறை.

ஆனால், தற்சமயம் குலுக்கல் நடைமுறைகளை முற்றிலுமாக ஒதுக்கி வைத்துவிட்டு, முதலில் வருபவர்களுக்கு தான் முன்னுரிமை வழங்கப்படும் என்பதன் அடிப்படையில், கோவை, மதுரை, சென்னை போன்ற நகரங்களில் வீடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலமாக, பல்வேறு முறை கேடுகள் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. முதலில் வருபவருக்குத்தான் முன்னுரிமை என்ற திட்டம் காரணமாக, அரசு அதிகாரிகளும், வியாபாரிகளும் கூட்டு சேர்ந்து, பணக்காரர்களுக்கு வீடுகளை விற்பனை செய்து விடுகிறார்கள். மேலும், இந்தத் திட்டத்தில் ஏழை, எளிய மக்களால், உடனடியாக பணம் செலுத்த முடியாது. அவர்களால் பணக்காரர்களோடு போட்டி போடவும் இயலாது.

இதனால், வீடுகளை வாங்க முடியாமல், ஏழை, எளிய மக்கள் தவிக்கும் சூழ்நிலை உள்ளது. எனவே, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். வீடுகள் விற்பனை திட்டத்தை அனைவருக்கும் எளிதாக கிடைக்கும் வகையில், ஏழை, பணக்காரர்கள் என்ற பாகுபாடு இல்லாமல், வெளிப்படை தன்மையோடு, குலுக்கல் முறையில் வீடுகளை ஒதுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Post

இதை நிறைவேற்றும் வரை தாக்குதல் தொடரும்..!! இஸ்ரேல் அதிரடி அறிவிப்பு..!!

Thu Oct 12 , 2023
இஸ்ரேலுக்கு முழு ஆதரவு என அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் டெல் அவிவ் நகருக்கு சென்று இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவை சந்தித்து பேசியுள்ளார். ஏற்கனவே இஸ்ரேலுக்கு அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் சென்றடைந்துள்ளன. இதைத்தொடர்ந்து அமெரிக்காவின் ஆதரவை மேலும் தெளிவாக உறுதிப்படுத்தும் வகையிலே இந்த சந்திப்பு உள்ளது. இஸ்ரேலிய பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தி தற்போதைய போர் நிலவரம், பிணை கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட […]

You May Like