கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதற்கான ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இளங்கலை பட்டப்படிப்பு வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த தேர்வு நாளை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு 10-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தத் தேர்வினை 9-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்கள் 95,000 பேர் எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், புயல், கனமழைக் காரணமாக 17-ம் தேதி நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.