தமிழ்ப் புதல்வன் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலம் கல்வியை தனிமனித மற்றும் சமுதாய முன்னேற்றத்தின் அடிக்கல்லாக அங்கீகரித்து, தனிநபர் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு ஆண் மாணவர்களுக்கு “தமிழ்ப் புதல்வன் திட்டம்” துவக்கி அவர்களை நிதிக் கட்டுப்பாட்டில் இருந்து மீட்டு கல்வியில் வறுமை ஒரு தடையாக மாறாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் இத்திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.
ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட பின்னணியிலிருந்து அரசு பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவுவதற்காக, அவர்களின் உயர்கல்வி கனவுகளை நனவாக்கி சாதனையாளர்களாக மாற்றும் மாபெரும் திட்டம் “தமிழ்ப் புதல்வன் திட்டம்” ஆகும்.
ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட பின்னணியிலிருந்து அரசு பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவுவதற்காக, அவர்களின் உயர்கல்வி கனவுகளை நனவாக்கி சாதனையாளர்களாக மாற்றும் மாபெரும் திட்டம் “தமிழ்ப் புதல்வன் திட்டம்” ஆகும். இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார்.
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற. வருமான உச்ச வரம்பை பொருட்படுத்தாமல், அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி வகுப்புகளில் பயிலும் ஆண் மாணவர்கள். ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பல மாணவர்களும் பயன் பெறலாம். மாதாந்திர ஊக்கத்தொகை DBT Portal மூலம் வரவு வைக்கப்படும். 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்ற ஆண் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
6 முதல் 8ம் வகுப்பு வரை RTE ல் பயின்று பின் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் பயன் பெறலாம். ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண், ஆதார் Seeding செய்யப்பட்ட வங்கிக் கணக்கு எண், EMIS Number, UMIS Number, இந்த கட்டாய ஆவணங்களுடன் மாணவர்கள் அந்தந்த உயர் கல்வி நிறுவனங்கள் மூலம் இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.