fbpx

உலகை தன்பக்கம் திரும்பி பார்க்கவைத்த தமிழன்!… மதுரை To கூகுள் சிஇஓ!… சுந்தர் பிச்சை பிறந்த நாள் தொகுப்பு!

தமிழர்களின் ஆற்றலை உலகம் அறியச் செய்த ஆயிரக்கணக்கான மனிதர்களில் சுந்தர் பிச்சையும் ஒருவர். யார் இந்த சுந்தர் பிச்சை, தமிழகத்திற்கும் அவருக்குமான உறவு குறிந்து இங்கு பார்க்கலாம்.

இணையத்தில் உலவும் பெரும்பாலான மக்கள் இந்த தளம் எதற்காக என்று அறிந்திருந்தாலும், பலருக்கு அதன் பெயர் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை, அதன் தோற்றம் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது. சீனா மற்றும் ரஷ்யாவைத் தவிர, பிற வகை தேடுபொறிகள் பயன்படுத்தப்படும் உலகில் Google மிகவும் பிரபலமான தேடுபொறியாகும். இருப்பினும், மேற்கத்திய உலகிற்கு, கூகுள் என்றால் என்ன? இணைய பயனர்களுக்கு கிடைக்கும் மிக முக்கியமான கருவிகளில் ஒன்றாகும். சில வகையான உள்ளடக்கம் அல்லது ஆதாரங்களைத் தேட விரும்பும் போது இது ஒரு ஆதரவாகும், இது மில்லியன் கணக்கான பக்கங்களை மிகவும் எளிதான மற்றும் திறமையான வழியில் அணுக அனுமதிக்கிறது.

உலகின் முதல் தொழில் நுட்ப நிறுவனத்தை வழி நடத்தும் பொறுப்பு சுந்தர் பிச்சையின் வசம் வந்தது. இப்படி மதுரையில் பிறந்து உலக இளைஞர்களை தன் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்த சுந்தர் பிச்சை இன்று தனது 51 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
கோடிக்கணக்கான இன்றைய தலைமுறை இளைஞர்கள் ஒரு நாளைக்கு ஒரு முறையேறும் பயன்படுத்தும் மென்பொருள் கூகுள். ஆனால் இந்த கூகுளுக்கும், தமிழகத்திற்கும் இடையே அசைக்க முடியாத பிணைப்பை ஏற்படுத்தியவர் சுந்தர் பிச்சை. தமிழர்களின் ஆற்றலை உலகம் அறியச் செய்த ஆயிரக்கணக்கான மனிதர்களில் சுந்தர் பிச்சையும் ஒருவர். யார் இந்த சுந்தர் பிச்சை, தமிழகத்திற்கும் அவருக்குமான உறவு குறிந்து இங்கு பார்க்கலாம்.

சுந்தர் பிச்சை தமிழ் நாட்டில், மதுரையில் 10 ஜூன் 1972 பிறந்தார். இவரது தந்தை ரகுநாத பிச்சை. தாயார் லட்சுமி ஆவார். இவர் சென்னையில் உள்ள சவகர் வித்தியாலயா பள்ளியில் பத்தாம் வகுப்பும், ஐஐடி வளாகத்தில் உள்ள வனவாணி பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பும் படித்தார். பிறகு ஐ.ஐ.டி கரக்பூரில் உலோகப் பொறியியல் பயின்ற இவர், ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தில், பொருளறிவியல் பட்டம் பெற்றார். பின்னர் வார்ட்டன் மேலாண்மைப் பள்ளியில் மேலாண்மைப் பட்டம் பெற்றார்.

ஆரம்பத்தில் வெளிநாட்டிற்குச் சென்று கல்லூரிப் படிப்பை முடித்த சுந்தர் பிச்சை மெக்கின்சி & கம்பெனி என்ற நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு அப்ளைடு மெட்டீரியல்ஸ் மற்றும் மேலாண்மை ஆலோசனையில் பொறியியல் மற்றும் தயாரிப்பு மேலாண்மையில் பணியாற்றினார். இதற்கிடையில் மேலாண்மைத்துறையிலும் சாதிக்க எண்ணி மீண்டும் கல்வியை தொடர்ந்தவர் 2002ம் ஆண்டு எம்.பி.ஏ பட்டம் பெற்றார். பின் சுந்தர் பிச்சை 2004 ஆம் ஆண்டு கூகுள்இல் இணைந்தார்.

கூகுள் நிறுவனத்தில் குரோம், மற்றும் குரோம் ஓ.எஸ் போன்ற கூகுளின் மென் பொருள் தயாரிப்பில் தலைமை வகித்தார். இதைத்தொடர்ந்து கூகுள் டிரைவின் முக்கிய பொறுப்பில் இடம் பெற்றார். பின் ஜிமெயில் மற்றும் கூகுள் மேப்ஸ் உட்பட பல புதிய தயாரிப்புகளின் போதும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். இதையடுத்து 2013ம் ஆண்டில் ஆண்ட்ராய்டை நிர்வகிக்கும் பணி சுந்தர் பிச்சைக்கு வழங்கப்பட்டது.

இதற்கிடையில் தான் ஆல்பாபெட் இன்க் நிறுவனத்தை உருவாக்கி அதன் கீழ் கூகுள் நிறுவனத்தை கொண்டு வர தலைமை செயல் அதிகாரியாக லாரி பேஜ் முடிவு செய்தார். இதையடுத்து ஆல்பா பெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக லாரி பேஜ் பொறுப்பேற்றக் கொண்டார். இதற்கிடையில் தான் கூகுள் நிறுவனத்தில் 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுந்தர் பிச்சை தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து 2017 ல் ஆகஸ்ட் மாதம் பாலின பாகுபாடற்ற பணிச்சூழலை உருவாக்க வேண்டும் என்ற கூகுளின் கொள்கையை எதிர்த்த கூகுள் பணியாளரை அதிரடியாக வேலையை விட்டு நீக்கினார் சுந்தர் பிச்சை. இதைத்தொடர்ந்து ஏராளமான பெண்களின் விருப்பத்திற்கு உரிய மனிதனாக மாறிவிட்டார் சுந்தர் பிச்சை

இதற்கிடையில் கூகுள் நிறுவனத்தை உருவாக்கிய லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் இருவரும் ஆல்பபெர்ட் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக முடிவெடுத்தனர். இதையடுத்து கூகுள் மற்றும் ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைவராக சுந்தர் பிச்சையே பொறுப்பேற்றார். இதைத்தொடர்ந்தே உலகின் முதல் தொழில் நுட்ப நிறுவனத்தை வழி நடத்தும் பொறுப்பு சுந்தர் பிச்சையின் வசம் வந்தது. இப்படி மதுரையில் பிறந்து உலக இளைஞர்களை தன் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்த சுந்தர் பிச்சை இன்று தனது 51 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். சுந்தர் பிச்சை இன்றைய இளைஞர்கள் மத்தியில் எளிய குடும்பத்தில் பிறந்தாலும் கடின உழைப்பும் விடா முயற்சியும் இருந்தால் உலகை தன் பக்கம் திரும்பிப்பார்க்க வைக்கலாம் என்பதை உணர்த்தும் உந்து சதியாக விளங்கி வருகிறார்.

Kokila

Next Post

தமிழக அரசு வழங்கும் ரூ.5 லட்சம் காசோலை பிளஸ் விருது...! 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு...!

Sat Jun 10 , 2023
துணிவு மற்றும்‌ வீர சாகசச்‌ செயல்களுக்கான “கல்பனா சாவ்லா விருது- ஒவ்வொரு ஆண்டும்‌ தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களால்‌ சுதந்திரதின விழாவின்போது வழங்கப்படுகிறது. இந்த விருதில்‌, ரூ.5 இலட்சத்திற்கான காசோலையும்‌ மற்றும்‌ ஒரு,பதக்கமும்‌ அடங்கும்‌, தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த, துலசிச்சலான மற்றும்‌ வீர சாகசச்‌ செயல்‌ புரிந்தபெண்‌ விண்ணப்பதாரர்‌ மட்டுமே இவ்விருதினைப்‌ பெறத்‌ தகுதியுள்ளவர்‌. 2023-ஆம்‌ ஆண்டு வழங்கப்படவுள்ள விருதிற்கான விண்ணப்பங்கள்‌, விரிவானதன்விவரக்‌ குறிப்பு, உரிய விவரங்கள்‌ மற்றும்‌ அதற்குரிய விண்ணப்பித்தை https://awards.tn.gov.in […]

You May Like