fbpx

எச்சரிக்கை..!! இனி இந்த பிராண்ட் சரக்கை விற்க கூடாது.. டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தல்!!

டாஸ்மாக் மதுபான கடைகளில் ஒரு குறிப்பிட்ட பிராண்டு பிராந்தி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தால் அவற்றை உடனடியாக சம்பந்தப்பட்ட மதுபான குடோன்களுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என டாஸ்மாக் கடைகளின் ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டுக்குரிய கோல்டன் வாட்ஸ் நம்பர் 1 பிராந்தி விற்பனைக்கு உகந்தது அல்ல என்றும், கடைகளில் ஸ்டாக் இருந்தால் திருப்பி அனுப்புமாறும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டாஸ்மாக் மதுபான கடைகளில் விற்பனைக்கு வரும் மதுபான வகைகள் தர பரிசோதனை செய்யப்படுவது வழக்கம். அந்தவகையில், இந்த வகை பிராந்தி தரப் பரிசோதனையில் தோல்வி அடைந்துள்ளதால் அவற்றை விற்பனை செய்ய வேண்டாம் என கூறப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால், அந்த பிராண்ட் மதுபானத்தை குடித்து வந்த மதுப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனினும், அந்த குறிப்பிட்ட காலகட்டத்திலான அந்த தயாரிப்பு பெரும்பாலும், கடைகளில் இல்லை எனக் கூறப்படுகிறது.

Read more | கல்லீரலை தானமாக கொடுத்து மகளின் உயிரைக் காப்பாற்றிய தந்தை..!

English Summary

The TASMAC management has instructed the employees of the TASMAC shops to immediately return the liquor of a particular brand to the relevant liquor kiosks if they are on sale in the TASMAC liquor stores.

Next Post

5 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்... 3 நாட்களுக்கு வெளுத்து வாங்க போகுது கனமழை...!

Sun Jul 14 , 2024
Yellow alert and heavy rains are likely in 5 districts for 3 days, says Meteorological Department.

You May Like