பல்கலைக்கழக விரிவுரையாளர் பணிக்கு போட்டித் தேர்விற்கு வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கப்படாது என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில்; ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கம்ப்யூட்டர் மூலம் ஆன்லைனில் தேர்வு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் மட்டுமே பணியிடங்கள் நிரப்பப்படும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் உள்ளது போல, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்பப்படும் பணியிடங்களுக்கும் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கப்படாது.
மேலும், இதற்கு முன்பு பல்கலைக்கழகப் பணியிடங்கள் அந்தந்த பல்கலைக்கழகங்கள் மூலம் நிரப்பப்பட்டு வந்த நிலையில், இப்போது புதிதாக ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இணைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள இருக்கும் ஆசிரியர்களை தேர்வு செய்ய தரமான வினாத்தாள்கள் வடிவமைக்கப்பட உள்ளதாகவும், புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களின் நிபுணர்களால் 3 முதல் 6 மாதத்திற்குள் வடிவமைக்கப்பட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.