காற்றுக்காக கதவை திறந்து தூங்கிய ஆசிரியையை கத்திமுனையில் பாலியல் பலாத்காரம் இளைஞர் ஒருவரை மகளிர் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுதொடர்பாக போலீஸ் தரப்பு கூறுகையில், ”சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த 31 வயது பெண் ஒருவ,ர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். இவரது கணவர் இரவு நேரத்தில் ஆட்டோ ஓட்ட சென்று விடுவதால் வீட்டில் மகள்களுடன் தனியாக இருப்பார். இந்நிலையில், கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், இரவு புழுக்கம் அதிகளவில் இருந்துள்ளது.
இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு காற்றுக்காக கதவை சற்று திறந்து வைத்து தனது பிள்ளைகளுடன் அந்த ஆசிரியை தூங்கிக் கொண்டிருந்துள்ளார். நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த போதை ஆசாமி ஒருவர், வீடு புகுந்து தூங்கிk கொண்டிருந்த பெண்ணை தட்டி எழுப்பி, கத்தி முனையில் மிரட்டியுள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் அருகிலேயே இரண்டு பெண் பிள்ளைகள் படுத்திருந்ததால் அந்த நபர் மகள்களை ஏதாவது செய்து விடுவாரோ என பயந்துள்ளார்.
இதனால், சத்தம் போட முயன்றபோது அந்த நபர் கத்தியை காட்டி மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர், அந்த ஆசாமி அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டுள்ளார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டுள்ளனர். தப்பியோட முயன்ற அந்த நபரை விரட்டி பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர், அவரை கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதையடுத்து, அவரை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Read More : தொடர்ந்து சிலிண்டர் வேண்டுமா..? வாடிக்கையாளர்களின் கைரேகை பதிவு கட்டாயம்..!! எப்படி செய்வது..?