fbpx

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 31 ஆண்டு சிறை..!!

திருவள்ளூர் மாவட்டம் திருவலாங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரம் அடுத்த காஞ்சிபாடி கிராமத்தை சேர்ந்தவர் டில்லிபாபு (வயது 30). இவர் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் கனகம்மாசத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் டில்லிபாபுவை கனகம்மாசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தார்.

இது தொடர்பான வழக்கு திருவள்ளூர் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு சார்பில் வக்கீல் அமுதா வாதங்களை எடுத்துரைத்தார். இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி சுபத்ராதேவி தீர்ப்பளித்தார். அதன்படி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டில்லிபாபுவிற்கு 31 ஆண்டுகள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

இதனைத் தொடர்ந்து டில்லிபாபுவை போலீசார் கைது செய்து புழல் மத்திய சிறையில் அடைத்தனர். சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளிக்கு 31 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Maha

Next Post

அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னரும் கொளுத்தும் கோடை வெயில் திருச்சியில் குறையும் வெப்பம்……! இன்றைய வானிலை நிலவரம் எப்படி இருக்கிறது…..?

Sat Jun 10 , 2023
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் கோடை மழையுடன் ஆரம்பமானாலும் கோடையில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் திருச்சியில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் தொடர்ந்து 100 டிகிரிக்கு அதிகமாகவே இருக்கிறது கடந்த மே மாதம் வெயில் தாக்கம் உச்சத்தை எட்டியது. கடந்த கோடை காலங்களை விடவும் இந்த முறை வெப்பத்தின் அளவு அதிகமாகியுள்ளது. ஆனால் தற்போது மே மாதம் முடிந்துவிட்ட நிலையில், சென்ற மாதத்தை விட […]

You May Like