fbpx

பிரபலங்களின் வீடுகளில் திருடி ஏழை மக்களுக்கு உதவி செய்த திருடன்..!! 3 மனைவிகள், காதலியுடன் உல்லாசம்..!!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதி எம்பி, எம்எல்ஏ காலனி அருகே வசிப்பவர் அனுராக் ரெட்டி. தொழிலதிபரான இவரது வீட்டில் கடந்த 9ஆம் தேதி பணம், நகை கொள்ளை போனது. இதுகுறித்து போலீசில் அனுராக்ரெட்டி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவிக்களில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர். அப்போது ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் மர்மநபர் ஒருவரின் முகம் பதிவாகியிருந்தது.

அதை வைத்து போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர். இதில் அந்த நபர் பீகாரை சேர்ந்தவர் என்பதும், டெல்லி, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட பல மாநிலங்களில் அதிக வசதியானவர்கள், பிரபலங்களின் வீடுகளில் கைவரிசை காட்டியதும் தெரியவந்தது. இவர், ஐதராபாத்திற்கு வரும்போதெல்லாம் ஒரு ஓட்டலில் தனக்கு ராசியான அறையில் தங்குவாராம். இதையறிந்த போலீசார், நேற்று முன்தினம் அந்த மர்ம நபர், ஓட்டலுக்கு வந்தபோது சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர் பீகாரை சேர்ந்த முகமது இர்பான் (40) என்பதும், அனுராக்ரெட்டி வீட்டில் திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து, தொடர்ந்து நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. முகமது இர்பானின் முதல் மனைவி மாவட்ட ஊராட்சிக்குழு தலைவராக உள்ளார். இரண்டாவது மனைவி குல்ஷான். இவர் மும்பையில் உள்ள பாரில் வேலை பார்க்கிறார். கொல்கத்தாவை சேர்ந்த ஒரு பெண்ணை 3-வது திருமணம் செய்துள்ளார். 4-வதாக தற்போது ஒரு காதலி உள்ளார்.

அனுராக் ரெட்டி வீட்டில் திருட நோட்டமிட்ட முகமது இர்பான், கடந்த 8ஆம்தேதி ஐதராபாத் வந்து தனக்கு ராசியான அறையில் தங்கியுள்ளார். பின்னர், மறுநாள் திருட செல்லும்போது சிசிடிவி கேமராவில் சிக்காமல் இருக்க தெரு, சாலையில் நடந்து செல்லாமல் வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கு குதித்து குதித்து செல்வாராம். தனது முதல் கைவரிசையின்போது சிசிடிவி கேமரா இல்லாத வீட்டை தேர்வு செய்து பணம், நகைகளை திருடியுள்ளார். அனுராக் ரெட்டி வீட்டில் திருடிய நகை, பணத்துடன் மும்பையில் உள்ள தனது 2-வது மனைவி குல்ஷான் வீட்டிற்குச் சென்று அன்றிரவு தங்கியுள்ளார்.

மறுநாள் மீண்டும் ஐதராபாத்திற்கு திருட வந்துள்ளார். பெரும்பாலும் தொழிலதிபர்கள், நடிகர், நடிகைகள் உள்பட பல பிரபலங்களின் வீடுகளில் மட்டுமே திருடியுள்ளார். அவ்வாறு திருடும் நகை, பணத்தில் 50 சதவீதம் ஏழைகளுக்கு உணவு, உடை, பணம் என கொடுத்துவிடுவாராம். பள்ளிக் கட்டணம், மருத்துவ சிகிச்சை கட்டணம் என உதவி செய்வாராம். அதுமட்டுமின்றி தனது சொந்த கிராமத்தில் தெருவிளக்குகளை அமைத்து கொடுத்துள்ளாராம். இதனால் அவரது ஊர் மக்கள், ‘உஜ்வல்’ என்று அழைப்பார்களாம்.

இந்நிலையில், முகமதுஇர்பான் மீது ஐதராபாத்தில் 4, பெங்களூருவில் 7, டெல்லியில் 4 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதையடுத்து ஐதராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது இர்பானை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் ஐதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

தமிழ்நாட்டிற்கு கனமழை அலர்ட்..!! டிசம்பர் 30இல் மீண்டும் சம்பவம்..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

Tue Dec 26 , 2023
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் டிசம்பர் 30ஆம் தேதி ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை மற்றும் காற்றின் மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி, டிசம்பர் 26, 27, 28, 29, 31 மற்றும் ஜனவரி 1, 2 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், […]

You May Like