தமிழகத்தில் புளூ காய்ச்சல் என்று அழைக்கப்படும் எச்1.என்1. இன்புளூயன்சா காய்ச்சல் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இந்த வகை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வரக்கூடிய மக்கள் அதிகரித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஏராளமான குழந்தைகள் இந்த காய்ச்சலால் அதிகம் பாதிக்கபட்டு உள்ளனர். நெல்லை மாவட்டம் பத்தமடையில் மர்ம காய்ச்சலால் இரண்டு வயது குழந்தை உயிரிழந்தது. இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பத்தமடை பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி இசக்கிமுத்துவின் குழந்தை பிரதிக்சாவுக்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
இதனால் பெற்றோர்கள் குழந்தையை ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். ஆஸ்பத்திரியில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி குழந்தை பிரதிக்சா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பத்தமடை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.