fbpx

மொத்த மதிப்பெண் 200தான்,, ஆனால் எடுத்ததோ 212! அது எப்படி திமிங்கலம்? தீயாய் பரவும் மீம்ஸ்..

குஜராத்தில் 4ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு 2 பாடங்களில் 200க்கு 210க்கு மேல் மதிப்பெண் வழங்கப்பட்டது சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் ஆரம்பக் கல்வி முடிவுகள் வெளியாகின. தாஹோத் மாவட்டத்தின் அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வரும் மாணவியான வன்ஷிபென் மனிஷ்பாய் அவருடைய ரிப்போர்ட் கார்டை பெறுவதற்காக பெற்றோருடன் சென்றுள்ளார்.

அனைத்து பாடங்களிலும் நல்ல மதிப்பெண் பெற்றிருந்த வன்ஷிபென் மனிஷ்பாய்-ன் ரிப்போர்ட் கார்டை பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். ரிப்போர்ட் கார்டில் இருந்த மார்க், அவர்கள் அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. அப்படி என்ன அந்த ரிப்போர்ட் கார்டில் என்னதான் இருந்தது என்பது தான் ஆச்சரியம். அதில், கணக்குப் பாடத்தில் 200 மதிப்பெண்களுக்கு 212 மதிப்பெண்கள் எடுத்திருப்பதாகவும், குஜராத்தி மொழிப்பாடத்தில் 200 மதிப்பெண்களுக்கு 211 மதிப்பெண்கள் பெற்று இருப்பதாகவும் அச்சிடப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி வன்ஷீபனின் பெற்றோர் பள்ளியைத் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர்.

அதற்கு, கணக்கீட்டில் ஏற்பட்ட சிறு பிழை காரணமாக இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளதாக பள்ளி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து திருத்தம் செய்யப்பட்ட புதிய மதிப்பெண் பட்டியல் அந்த சிறுமிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே குளறுபடியுடன் கூடிய மதிப்பெண் பட்டியல் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் இந்த மதிப்பெண் பட்டியலை பதிவிட்ட நெட்டிசன்கள் மீம்ஸ்களில் கலாய்த்து வருகின்றனர்.

Next Post

வீட்டில் ஏசி போடும் முன் இந்த விஷயத்தை செய்ய மறந்துறாதீங்க..!! உயிருக்கே ஆபத்து..!!

Tue May 7 , 2024
லேப்டாப், வாஷிங் மெஷின், ஃப்ரிட்ஜ் போன்றவற்றை வெறும் கால்களுடன் தொடும்போது பல சமயங்களில் ஷாக் அடிக்கும். அதற்கு காரணமே வீட்டில் எர்த்திங் (Earthing) செய்யாதது தான். மின்சாதனத்தில் கோளாறு ஏற்பட்டாலும், மின்சாரம் அதில் பாயும்போது அதை தற்செயலாக தொட்டாலும் கடும் ஆபத்தை விளைவிக்கலாம். அதிக வோல்டேஜில் மின்சாரம் வரும்போது, மின்சாதனத்தின் கேபிள் இறுக்கமாக இல்லையென்றால், சாதனத்தை தொடுபவர்களுக்கு ஷாக் அடிக்கலாம். மின்சாரத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க, வீட்டில் ஏசி அல்லது […]

You May Like