fbpx

வாகன ஓட்டிகள் எல்லோருக்கும் கவனம்… இனி இதை செய்தால் கடும் நடவடிக்கை…! போலீசார் எச்சரிக்கை

No Entryயில் வாகனத்தை ஓட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.

சென்னை பெரம்பூர் ரயில்வே சுரங்கப்பாதை அருகே கடந்த 8-ம் தேதி போக்குவரத்து காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக No Entryயில் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று சென்றது.

அந்த ஆட்டோவை போக்குவரத்து எஸ்ஐ ஒருவர் மடக்கிப் பிடித்தார். அப்போது ஆட்டோவில் கர்ப்பிணி இருப்பதைப் பார்த்த அவர், அபராதம் ஏதும் விதிக்காமல் ஆட்டோவை உடனடியாகச் செல்ல அனுமதித்தார். அப்போது அதில் பயணம் செய்த ஒருவர், ‘No entry’ எச்சரிக்கைப் பலகை ஏன் இல்லை..? எனக்கேட்டு போக்குவரத்து எஸ்.ஐ.யிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்த நிலையில், No Entryயில் வாகனங்களை ஓட்ட வேண்டாம் என போக்குவரத்து காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வாகன ஓட்டிகள் தவறான பாதையில் பயணிப்பதால், போக்குவரத்திற்கு சிரமம் ஏற்படுவதாகவும், விபத்துகள் ஏற்படுவதாகவும் சுட்டிக் காட்டியுள்ள போக்குவரத்து போலீசார், அனைவரும் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும்.. மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Vignesh

Next Post

100 யூனிட் பயன்படுத்தும் மின் நுகர்வோர்களுக்கு... இலவச மின்சார கட்டணம் அதிகரிப்பா...?

Mon Sep 12 , 2022
தமிழகத்தில் கடந்த 10-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வு குறித்து சமூக வலைத்தளத்தில் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. கட்டண உயர்வு எவ்வளவு வரை உயர்த்தப்பட்டுள்ளது என்பது மக்களுக்கு குழப்பமாகவே உள்ளது. அந்த வகையில் யார் யாருக்கு எவ்வளவு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறித்து பார்க்கலாம். 100 யூனிட் மட்டுமே பயன்படுத்தக்கூடிய மின் நுகர்வோர் தமிழகத்தில் ஒரு கோடி பேர் உள்ளனர். அவர்களுக்கு எவ்வித கட்டண உயர்வும் […]
’உங்க வீட்ல கரண்ட் பில் அதிகமா வருதா’..? இதை செய்தாலே பாதி பணத்தை மிச்சம் செய்யலாம்..!!

You May Like