fbpx

தன் மீது தமிழக அரசு வாங்கிய ரூ.90,558 கடனை திருப்பி செலுத்திய திருச்சி இளைஞர்..!

திருச்சியை சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் ஒருவர் ‘தமிழன்’ பட பாணியில், தமிழகத்தின் கடனை அடைப்பதற்காக தன்னுடைய பங்காக 90,558 ரூபாயை தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கு அனுப்பி வைத்து அதிரவைத்துள்ளார்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கொப்பம்பட்டியை சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகன் சின்னராஜா செல்லதுரை. இவருக்கு திருமணமாகி, ஒரு குழந்தை உள்ளது. தற்போது இவர், சவூதி அரேபியாவில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். பொருளாதாரம் குறித்த படிப்பையும் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 2022ஆம் ஆண்டு நடந்த, தமிழக பட்ஜெட் (2022-2023) அறிக்கையை செய்தி மூலம் அறிந்திருக்கிறார்.

தன் மீது தமிழக அரசு வாங்கிய ரூ.90,558 கடனை திருப்பி செலுத்திய திருச்சி இளைஞர்..!

அதில், மார்ச் 31, 2023 நிலவரப்படி, தமிழக அரசின் கடன், ரூ.6,53,348.73 கோடியாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 7,21,47,030. இந்நிலையில், மார்ச் 31, 2023 நிலவரப்படி, ஒவ்வொரு தமிழனின் மீதுள்ள தமிழக அரசின் கடன், 6,53,348.73 கோடி ரூபாயாக உள்ளது. தமிழ்நாட்டின் மக்கள் தொகையை கடன் தொகையுடன் வகுத்தால், தனி நபர் ஒருவருக்கு கடன் ரூ.90,558.00ஆக வருகிறது. இதன் காரணமாக வருத்தமடைந்த சின்னராஜா, தனது பங்களிப்பைச் செலுத்த முடிவு செய்துள்ளார்.

தன் மீது தமிழக அரசு வாங்கிய ரூ.90,558 கடனை திருப்பி செலுத்திய திருச்சி இளைஞர்..!

இதற்காக கடந்த 6 மாதங்களாக அவர் சேமித்து வைத்திருந்த 90,558 ரூபாயை தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார். இதுகுறித்து சின்னராஜா கூறுகையில், ”தமிழக அரசின் கடனை செலுத்துவதற்காக எனது பங்களிப்பை செலுத்தியுள்ளேன்.
தமிழ்நாடு ஒரு குடும்பம், இக்குடும்பத்தில் பிறந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். கடன் இல்லாத தமிழகம் அமைய எல்லோரும் தங்களது பங்களிப்பை செலுத்த வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார். இவரது பங்களிப்புக்கு நன்றி தெரிவித்து, நிதித்துறை இணைச் செயலாளர் சின்னராஜாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

Chella

Next Post

கிளினிக்கின் கதவை திறக்காததால்; நோயாளியுடன் வந்தவர்கள்.. டாக்டரை தாக்கிய அதிர்ச்சி சம்பவம்..!

Sun Sep 11 , 2022
மகாராஷ்டிரா மாநிலத்தில் நோயாளி ஒருவருடன் வந்த கும்பலால், டாக்டர் ஒருவர் அடித்து தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாராமதி பகுதியில் டாக்டர் கெய்க்வாட் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். சம்பவம் நடந்த அன்று இரவு, டாக்டர் தனது வீட்டின் வளாகத்தில் நடத்தி வரும் கிளினிக் கதவை மூடிவிட்டு தனது குடும்பத்தினருடன் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது கிளினிக் கதவை பலமாக தட்டும் சத்தம் கேட்டது. சாப்பிட்டு கொண்டிருந்ததால் உடனடியாக […]

You May Like