மும்மொழிக் கொள்கை குறித்து விஜய் எல்லாம் கருத்து சொல்லவே கூடாது என தமிழிசை சௌந்தரராஜன் காட்டமாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசியுள்ள பாஜக மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், “இந்தியை நாங்கள் திணிக்கவில்லை. 3-வதாக வேறு எந்த ஒரு மொழியாவது கற்றுக் கொள்ளுங்கள் என்றுதான் சொல்கிறோம். நடிகர் விஜய்யின் திரைப்படம் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. உங்கள் வியாபாரத்திற்கு மட்டும் மும்மொழிக் கொள்கை தேவை என்றபோது, மாணவர்கள் மட்டும் 3 மொழிகளை கற்றுக் கொள்ளக் கூடாதா..?
குழந்தைகளின் வருங்காலத்திற்கு பல மொழிக்கொள்கை தேவைப்படும். எனவே, மும்மொழிக் கொள்கை குறித்து விஜய் எல்லாம் கருத்து சொல்லவே கூடாது. அப்படி சொல்வதென்றால், தனது படங்களை தமிழில் மட்டும்தான் வெளியிடுவேன் என விஜய் முதலில் சொல்ல வேண்டும். அரசு பள்ளி மாணவர்கள் இந்தி மட்டுமின்றி பல மொழிகளை கற்றுக் கொண்டால், கேரளாவிலோ அல்லது ஆந்திராவிலோ ஒரு வேலையை பெற முடியும். மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய நிதியை தடுப்பது மத்திய அரசு அல்ல திமுக அரசுதான்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
Read More : அதிர்ச்சி..!! இனி 70 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்காது..!! மத்திய அரசு அதிரடி..!!