தற்போது உள்ள இளம் தலைமுறையினர் இடையே எந்த விஷயமாக இருந்தாலும் தனக்கு சாதகமாகவே நடைபெற வேண்டும். தனக்கு பாதகத்தை விளைவிக்கும் எந்த ஒரு சம்பவமும் நடைபெறக்கூடாது என்று நினைக்கிறார்கள்.
அப்படி தன்னுடைய விருப்பத்திற்கு மாறாக எந்த ஒரு சம்பவம் நடைபெற்றாலும் அதனை பக்குவமாக எதிர்கொள்ளும் மனநிலையை தற்போதைய இளம் தலைமுறை பெறவில்லை என்பதே நிதர்சனமான உண்மையாக இருக்கிறது.
அப்படி தனக்கு சாதகமில்லாத சூழல் காணப்பட்டாலோ, தம்மால் ஒரு சூழ்நிலையை எதிர்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டாலோ உடனடியாக இந்த இளம் தலைமுறையினர் கையில் எடுக்கும் ஒரே ஆயுதம் தற்கொலை என்ற முடிவாக தான் இருக்கிறது.
அந்த வகையில், சென்னை மாவட்டத்தில் இருக்கின்ற பல்லாவரம் குளத்துமேடு வேம்புலி அம்மன் கோவில் 5வது தெருவில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மகள் ஹோமிதா (19) இவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
இவர் கடந்த 28ஆம் தேதி பல்லாவரம் குரோம்பேட்டை இடையே தண்டவாளத்தில் உடல் துண்டாகி உயிரிழந்த நிலையில் கிடந்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்திருக்கிறது.
அதாவது அதே பகுதியில் இருக்கும் டியூஷன் சென்டரில் 9ம் வகுப்பு படிக்கும் போது அந்த மாணவிக்கும் டியூஷன் ஆசிரியரான அஜய் என்பவருக்கும் நட்பு ஏற்பட்டு அதன் நாளடைவில் காதலாக மாறியது. பள்ளி படிப்பை முடித்து கல்லூரி சென்ற பின்னரும் அந்த மாணவி தன்னுடைய காதலை தொடர்ந்திருக்கிறார்.
இதனை அறிந்து கொண்ட அவருடைய பெற்றோர்கள், அந்த மாணவியை கண்டித்து இருக்கிறார்கள். அதோடு செல்போனையும் வாங்கி வைத்துக் கொண்டனர். இதனை அறிந்து கொண்ட அதை தன்னுடைய காதலிக்கு புதிதாக ஒரு கைபேசியை வாங்கி கொடுத்திருக்கிறார். ஆகவே இருவரும் இன்ஸ்டாகிராம் மூலமாக பேசி வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் தான், கடந்த 28ஆம் தேதி அதிகாலை திடீரென்று ஹோமிதா காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் வழங்கப்பட்டது. அதன் பிறகு அவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார் என்று சொல்லப்படுகிறது. அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்திருக்கிறது.
அதே சமயம் அதிகாலை சமயத்தில் ஹோமிதா எப்படி வெளியே வந்தார்? ஏன் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கின்ற குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே வந்து அவர் தற்கொலை செய்து கொண்டார்?அவருடைய காதலன் அஜய் அந்த பகுதிக்கு வந்தாரா? என்று பல்வேறு கேள்விகளுடன் காவல் துறையினர் தங்களுடைய விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது