தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கான கல்வி கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு ஒரு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை அரசே செலுத்தி வருகிறது. இவர்களுக்கான கட்டணத்தை அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு செலவிடப்படும் தொகையை அடிப்படையாக கொண்டு நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 2020-2021-ம் கல்வியாண்டில் LKG, UKG மற்றும் 1-ம் வகுப்பிற்கு 12,458.94 ரூபாயும், 2-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 12,449.15 ரூபாய் எனவும், 3-ம் வகுப்பிற்கு 12,578.98 ரூபாய் கட்டணம், 4-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 12,584.83 ரூபாயும், 5-ம் வகுப்பிற்கு 12,831.29 ரூபாயும், 6-ம் வகுப்பிற்கு 17,077.34 ரூபாயும், 7- ம் வகுப்பிற்கு 17,106.62 ரூபாயும், 8-ம் வகுப்பிற்கு 17,027.35-ம் நிர்ணயம் செய்யப்பட்டு, கட்டணம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், 2021-22ம் கல்வியாண்டில் LKG, UKG, 1, 2, 3, 4, 5-ம் வகுப்பிற்கு 12,076.85 ரூபாய் கட்டணமாகவும், 6, 7 மற்றும் 8-ம் வகுப்பிற்கு 15,711.31 ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.