பணப்புழக்கம் அதிகரித்தாலும், மற்றொரு பணமதிப்பிழப்பு திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தாது என மத்திய இணை அமைச்சர் விளக்கம்.
2016 நவம்பர் அன்று இனி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக இப்பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இது தொடர்பான வழக்குகளும் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
ரிசர்வ் வங்கியின் பரிந்துரையின் பேரில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதற்காக விரிவான முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மக்கள் தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை புதியதாக மாற்றுவதற்கு நியாயமான வாய்ப்பு வழங்கப்பட்டது.
ரூபாய் நோட்டுகள் புழக்கம் அதிகமானால் மீண்டும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்துப் பேசிய மத்திய நிதித்துறை இணையமைச்சர் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை நோக்கி மத்திய அரசு நகர்கிறது.
மேலும் நாட்டின் பொருளாதாரத்தில் பணப்புழக்கம் அதிகரித்தாலும், மற்றொரு பணமதிப்பிழப்பு திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தாது. பணப்புழக்கத்தைக் குறைக்கவே பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பதை ஏற்க முடியாது. கருப்புப் பணத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்ததாக தெரிவித்தார்.