fbpx

இனி இந்த பொருட்களுக்கு BIS சான்றிதழ் கட்டாயம்…! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!

தொழில்நுட்ப ஒழுங்குமுறைகளை அறிவிக்கும் சரியான செயல்முறையைத் தொடர்ந்து, ஏழு பொருட்களுக்கான மூன்று தரக் கட்டுப்பாட்டு உத்தரவுகளை மத்திய சுரங்க அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த கியூ.சி.ஓக்கள் அறிவிப்பு வெளியான தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு நடைமுறைக்கு வரும். இந்த கியூ.சி.ஓக்கள் BIS சட்டத்தின் கீழ் சுரங்க அமைச்சகத்தின் முதல் தொழில்நுட்ப ஒழுங்குமுறைகளைக் குறிக்கின்றன.

அலுமினியம் மற்றும் அலுமினிய உலோகக் கலவைகளுக்கான கியூ.சி.ஓ அலுமினியம் மற்றும் அலுமினிய உலோகக் கலவையின் உள்நாட்டு உற்பத்தி மற்றும் இறக்குமதிக்கு பொருத்தமான இந்திய தரநிலைகளின் கீழ் சான்றிதழை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உயர் தூய்மை முதன்மை அலுமினியம், தாங்கிகளுக்கான அலுமினிய உலோகக் கலவைகள், மறுசுழற்சி செய்வதற்கான முதன்மை அலுமினிய இங்கோட்டுகள்; அலுமினிய இங்கோட்கள், பில்லெட்டுகள் மற்றும் கம்பிகள் ஆகியவை இதில் அடங்கும். மீதமுள்ள இரண்டு கியூ.சி.ஓக்கள் தாமிரம் மற்றும் நிக்கல் தூளுக்கு பொருத்தமான IS தரங்களை வழங்குகின்றன.

நாட்டில் இரும்பு அல்லாத உலோகத் துறைக்கான தரக் கட்டுப்பாட்டு சூழலை வலுப்படுத்த சுரங்க அமைச்சகம் முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதற்காக, இரும்பு அல்லாத உலோக மதிப்பு சங்கிலியில் மேல்நிலை தயாரிப்புகள் மீது அதிக கியூ.சி.ஓக்களை தயாரிக்க அமைச்சகம் BIS உடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது.

தரமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தவும், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை தடுக்கவும், தொழில்துறை பயனர்கள் உட்பட உள்நாட்டு நுகர்வோருக்கு தரமான தயாரிப்புகளை வழங்குவதை இந்த உத்தரவுகள் உறுதிப்படுத்த உதவுகிறது. அறிவிக்கப்பட்ட உத்தரவுகள், அலுமினிய உலோகம் மற்றும் உலோகக் கலவைகள், தாமிரம் மற்றும் நிக்கல் ஆகியவற்றின் தரத்தை பயனர் தொழில்துறையின் நன்மைக்காக உறுதி செய்யும்.

அதே நேரத்தில், கியூ.சி.ஓ.க்கள் இந்த பொருட்களில் இந்திய தயாரிப்பு தரத்தை உலகத் தரத்திற்கு ஏற்ப உறுதி செய்வதோடு, சர்வதேச சந்தையில் ‘மேக் இன் இந்தியா’ பிராண்ட் மதிப்பை அதிகரிக்கும். பிரதமரின் தற்சார்பு இந்தியா என்ற தொலைநோக்கு பார்வையை நனவாக்கும் நோக்கில் சுரங்க அமைச்சகத்தின் பல முன் முயற்சிகளில் கியூ.சி.ஓ அறிவிப்புகளும் ஒன்றாகும்.

Vignesh

Next Post

அதிரடி...! சான்றிதழ்களில் மாணவர்களின் ஆதார் எண்ணை அச்சிட கூடாது...! UGC கல்லூரிகளுக்கு உத்தரவு...!

Sun Sep 3 , 2023
பட்டங்கள் மற்றும் தற்காலிக சான்றிதழ்களில் மாணவர்களின் ஆதார் எண்ணை அச்சிட அனுமதி இல்லை என பல்கலைக்கழக மானியக் குழு பல்கலைக்கழகங்களுக்கு தெரிவித்துள்ளது. மாணவர் சேர்க்கையின் போது மேற்கூறிய ஆவணங்களை சரிபார்ப்பதற்காக, பல்கலைக்கழகங்கள் வழங்கும் தற்காலிக சான்றிதழ்கள் மற்றும் பட்டங்களில் முழு ஆதார் எண்களை அச்சிடுவது குறித்து மாநில அரசுகள் பரிசீலித்து வருகின்றன என்ற செய்தி வெளியான நிலையில் மத்திய உயர்கல்வி கட்டுப்பாட்டாளரிடம் இருந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளின்படி, ஆதார் […]

You May Like