fbpx

ஜனநாயகன் ரிலீஸ் எப்போது..? 6 மணிக்கு வெளியாகும் முக்கிய அறிவிப்பு..!!  தளபதி வெறியர்களே இத பாருங்க! 

தவெக தலைவர் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படம் ஜன நாயகன். இந்த படத்துடன் விஜய் திரைத்துறையில் இருந்து விலகுவதாக கடந்த ஆண்டே அறிவித்திருந்தார். அரசியல் கட்சி துவங்கி முழுநேர அரசியல் பணிகளில் ஈடுபட இருப்பதால் இம்முடிவை எடுத்ததாக தெரிவித்திருந்தார். அதனால் ‘தளபதி 69’ படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்க கே.வி.என் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரும் அளவில் இருக்கும் நிலையில் படத்தின் படபடிப்பு வேகமாக நடந்து வருகிறது. முன்னதாக “நான் ஆணையிட்டால்..” என்ற தலைப்புடன் விஜய் சாட்டையை சுழற்றுவது போல் போஸ்டரை வெளியிட்டது படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய்யின் அரசியல் பயணத்தை குறிக்கும் விதமாகவும் இத்தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் போஸ்டர் விஜய் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.

ஜன நாயகன் படப்பிடிப்பை முடித்த கையோடு தீவிர அரசியலில் களம் இறங்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் ஜனநாயகன் படத்தின் அடுத்த அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. பட ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த செய்தி விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Read more: உடல் எடையை குறைக்க உதவும் நெய்.. இப்படி சாப்பிட்டா சீக்கிரம் ரிசல்ட் கிடைக்கும்.!!

English Summary

The update of Vijay’s film Jana Nayagan will be released today at 6 pm.

Next Post

’ஜாமீனுக்கு பின் உங்க நடவடிக்கையே சரியில்ல’..!! ’இன்னும் 10 நாள் தான் டைம்’..!! எச்சரித்த சுப்ரீம் கோர்ட்..!! மீண்டும் கைதாகிறார் செந்தில் பாலாஜி..!!

Mon Mar 24 , 2025
The Supreme Court has expressed dissatisfaction with Minister Senthil Balaji's actions after bail, saying they are unacceptable.

You May Like