தூத்துக்குடி மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர், செவிலியர், சுகாதார பணியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்..
ஆய்வக நுட்புநர் :
கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் Diploma or certified course in Medical Laboratory Technology படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 13,000
இடைநிலை சுகாதாரப் பணியாளர் :
கல்வித் தகுதி : DGNM அல்லது BSC Nursing படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 18,000
பல்நோக்கு சுகாதார பணியாளர்
கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பல்நோக்கு சுகாதார பணியாளர்/ சுகாதார ஆய்வாளர்/ துப்பரவு ஆய்வாளர் சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 14,000
வயதுத் தகுதி: 50 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3019d385eb67632a7e958e23f24bd07d7/uploads/2024/11/2024112658.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலகம், மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார நிலைய வளாகம், தூத்துக்குடி -628002
விண்ணப்பிக்க கடைசி தேதி : 04.12.2024