விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கட்டளைப்பட்டி, காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் மூர்த்தி (வயது 38). இவரின் மனைவி வெண்ணிலா (வயது 34). இவர்களுக்கு இரண்டு மகள்கள். விருதுநகர் அரசு மருத்துவமனையில், தற்காலிக ஓட்டுநராக மூர்த்தி வேலை பார்த்து வருகிறார். இதனால் வாரம் ஒருமுறை மட்டுமே அவர் வீட்டிற்கு வந்து செல்வார்.
இந்நிலையில், வெண்ணிலாவுக்கு பக்கத்து வீட்டில் வசித்து வந்த சகோதரர் முறைகொண்டவரின் மகன் கணேஷ் குமார் (வயது 21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் இந்த விவகாரம் மூர்த்திக்கு தெரியவரவே, அவர் தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெண்ணிலா தனது மகளுடன் மாயமாகினார். அவரை கண்டுபிடித்து தரக்கோரி காவல் நிலையத்திலும் மூர்த்தி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் இருதரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், வெண்ணிலாவின் முடிவால் செய்வதறியாது திகைத்தனர். மேலும், அவர் தனது கணவருடன் செல்ல மறுப்பு தெரிவித்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த மூர்த்தி, அவரின் சகோதரி நந்தினி (வயது 26) சேர்ந்து கணேஷ் குமாரை கட்டியால் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த கணேஷ் குமார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டபோதும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மூர்த்தி மற்றும் நந்தினியை அதிரடியாக கைது செய்தனர்.
Read More : உடல் எடையை குறைக்க இரவு உணவை தவிர்ப்பவரா நீங்கள்..? மருத்துவர்கள் எச்சரிக்கை..!!