Parliament: பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், இன்று நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடர் டிசம்பர் 20-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 26-ம் தேதி பாராளுமன்ற மைய மண்டபத்தில் அரசியல் சாசனத்தின் 75-ம் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்படும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். இதையடுத்து, பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இன்று காலை 11 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத் தொடரில் வக்பு சட்ட திருத்தம் உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
Readmore: ஓய்வூதியம் பெறும் நபர்கள் நவம்பர் 30-ம் தேதிக்குள் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் பெற வேண்டும்…!